விஜய்க்காக சரித்திர கதையுடன் காத்திருக்கும் டைரக்டர் சசிகுமார்

விஜய்க்காக சரித்திர கதையுடன் காத்திருக்கும் டைரக்டர் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sasikumarநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்டவர் சசிகுமார்.

இவரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் இயக்கவுள்ள சரித்திர கதையில் விஜய் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில்…’வரலாற்றுக் காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை.

ஆனால் வரலாற்று கதையை இயக்க ஆர்வம் உள்ளது.

அதற்கான கதை ஒன்றை தயார் செய்து விஜய்யிடம் கூறினேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் படம் தொடங்கப்படவில்லை.

ஆனால் விரைவில் விஜய்யுடன் சேர்ந்து அந்த வரலாற்று கதையை படமாக்குவேன் என தெரிவித்துள்ளார் சசிகுமார்.

யுவனை இஸ்லாம் மதத்திற்கு ஏன் மாற்றினீர்..? ஷாஃப்ரூன் நிஷா பதிலடி

யுவனை இஸ்லாம் மதத்திற்கு ஏன் மாற்றினீர்..? ஷாஃப்ரூன் நிஷா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan shankar raja third wifeஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

நிறைய ரசிகர்கள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள்? என கேட்டனர்.

இளையராஜா மகனை மாற்றிவிட்டீர்கள்? நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என பல கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன்.

எங்கள் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் யுவன். அவருக்கு இஸ்லாம் பிடித்துவிட்டது.

அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும். அவருடைய தேடலுக்கான விடைகள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என பதிலளித்துள்ளார்.

அப்டேட் தாடா என கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனம்

அப்டேட் தாடா என கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசந் தா னம் 3 வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனோ’ பட 3 போஸ்டர்களை அப்பட தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

உடனே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் அப்டேட் வேண்டும் என ஒருமையில் கேட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர், அயலான்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது கேஜேஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகருக்கு கேள்விக்கு பதிலளித்துள்ளது அந்த நிறுவனம்.

“அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம். இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

லாக்டவுன் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறோம். முடிஞ்சதும் ‘டாக்டர், அயலான்’ அப்டேட் அள்ளும் பாருங்க,” என தெரிவித்துள்ளனர்.

ஆக.. இப்போ எந்த ஒரு அப்டேட் இல்லை என்பதுதான் இந்த அல்வா.

சென்டிமீட்டருக்காக யோகி பாபுவை இயக்கும் தர்பார் பட ஒளிப்பதிவாளர்

சென்டிமீட்டருக்காக யோகி பாபுவை இயக்கும் தர்பார் பட ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and santhosh sivanரோஜா, தளபதி, இருவர், துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினியின் தர்பார் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

12 முறை தேசிய விருகளையும் வென்றிருக்கிறார் இவர்.

இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்திற்காக மஞ்சுவாரியர் மற்றும் காளிதாஸ் ஜெயராமை இயக்கி வருகிறார்.

இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

தமிழில் சென்டிமீட்டர் என்ற பெயரிட்டுள்ளார்.

இதில் யோகிபாபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

யோகி பாபு கேரக்டரை மலையாளத்தில் சௌபின் சாஹிர் என்பவர் செய்துள்ளார்.

இப்படம் கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு ரிலீசுக்கு தயாராகும் எனத் தெரிகிறது.

‘தியேட்டர் ஆரவாரத்துக்கு ஈடே கிடையாது.. ஆனால்… -. சூர்யா

‘தியேட்டர் ஆரவாரத்துக்கு ஈடே கிடையாது.. ஆனால்… -. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project - 2020-05-29T163828.317பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் இன்று முதல் நேரிமையாக ஆன்லைனின் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவது குறித்து சூரயா தெரிவித்துள்ளதாவது…

‘தியேட்டர்களில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் ஈடே கிடையாது. அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் புறம் தள்ள முடியாது.

ஒவ்வொரு வாரமும் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டியுள்ளது.

இதற்கு மாற்று வழியை கண்டறிவது அவசியம்.

வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் சினிமா தியேட்டர்களை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.

கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு துவங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் இன்டோர் படப்பிடிப்பு பின்னர் அவுட் டோர் படப்பிடிப்பை துவங்கலாம். ஆனால் அதிலும் கட்டுப்பாடு அவசியம்.”

என தெரிவித்துள்ளார் சூர்யா.

இளைய தளபதி பட்டத்தை ஆட்டைய போட்ட விஜய்..; சித்தப்பு உனக்கே ஆப்பு…?

இளைய தளபதி பட்டத்தை ஆட்டைய போட்ட விஜய்..; சித்தப்பு உனக்கே ஆப்பு…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay saravananகேப்டன் விஜயகாந்தை போல முக சாயல் உடையவர் நடிகர் சரவணன்.

1990களில் இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாவும் இவருடன் நாயகியாக நடித்துள்ளார்.

பருத்தி வீரன் படத்தில் கார்த்தியுடன் சித்தப்பா கேரக்டரில் நடித்து சித்தப்பு என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தார்.

1990 களில் வெளியான ‘நல்லதே’ நடக்கும் எனும் படத்தில் இவர் ஹீரோவாக நடித்த போது அப்பட டைட்டில் கார்டில் இளையதளபதி சரவணன் எனும் பட்டப்பெயர் இடம் பெற்றிருந்தது.

இது குறித்து சித்தப்பு சரவணன் தற்போது ஒரு பிரபல பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

அதில்… சேலத்தில் நடந்த ஒரு சினிமா பாராட்டு விழாவில் இவர் கலந்துக் கொண்டாராம்.

அப்போதைய சேலம் திமுக பிரமுகர் ஒருவர், சினிமாவில் தளபதியாக கலக்கிக் கொண்டிருக்கும் சரவணனுக்கு இளைய தளபதி என்று கொடுக்கலாம் என பட்டப் பெயர் சூட்டினாராம்.

இதன் பின்னர் தான் ‘இளையதளபதி சரவணன்’ எனும் பெயர் இடம் பெற்றிருந்தது.

அதன் பிறகு சரவணனுக்கு பெரிதாக படம் வாய்ப்புகள் இல்லை.

அப்போதுதான் விஜய் நடிக்கும் ஒரு படத்தில் இளைய தளபதி என அவருக்கு பட்டம் கொடுத்திருந்தார் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

இதனை பார்த்த சரவணன் நேரிடையாக எஸ்ஏசி.யை சந்தித்து, எப்படி என்னுடைய டைட்டிலை பயன்படுத்தலாம் என கேட்டாராம்.?

அதற்கு உங்களுக்கு பட வாய்ப்பு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூலாக கூறி விட்டாராம் எஸ்ஏசி.

ஆனால் அதன் பின்னர் சரவணனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால் இளைய தளபதி பட்டத்தை சரவணன் பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows