JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும் போது…

ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) முடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றார்.

ஜேசன் சஞ்சய்

அவர் ஸ்கிரிப்டை சொன்ன போது பார்வையாளர்களாக எங்களுக்கு திருப்தி.

ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில்…

“லைக்கா போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.

என்னைப் போன்ற இளம் திறமையாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்புக்காக சுபாஸ்கரன் சாருக்கு நன்றி கூறுகிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் தருகிறது. உறுதுணையாக இருந்த தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி” என்றார்.

ஜேசன் சஞ்சய்

Vijay son Jason Sanjay entry in Cinema in Lyca Production

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக சித்தார்த் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் ஜோதிகா & பிரியங்கா மோகனும் இருவரும் நாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ பட நாயகி அபர்ணா தாஸ் இணைவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

நவம்பர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் போட்டோஷூட்’ விரைவில் லண்டனில் நடைபெறும் என தெரிகிறது.

Vijay in dual role Thalapathy 68 movie updates

சீனு ராமசாமி-யின் அடுத்த அதிரடி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’

சீனு ராமசாமி-யின் அடுத்த அதிரடி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது படங்கள் எப்போதும் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ படம் வெளியானது.

இந்தப் படம் உலக அளவில் பல விருதுகளை இன்று வரை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏகன் என்ற நடிகர் ஹீரோவாக அறிமுகமாக டாக்டர் அருள் நந்து என்பவர் தயாரிக்க உள்ளார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோழிப்பண்ணை செல்லதுரை

Seenu Ramasamys next titled Kozhipannai Chellathurai

JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு.்இவரது காமெடியை ரசிக்காத தமிழர்களே இல்லை என்னும் அளவுக்கு நகைச்சுவை மன்னனாக சிறந்து விளங்கி வருகிறார்.

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விரைவில் வெளியாக உள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவின் இளைய தம்பி ஜெகதீசன் என்பவர் வயது 55 இன்று மதுரையில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் ஜெகதீசன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.

மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜெகதீசன்

Actor Vadivelus brother Jagadeesan passes away

பாங்காங்கிலும் நான் ஏகபத்தினி விரதன்.; நான் செஞ்சதை தம்பி ராமையா இப்போ செய்றார் – சந்தானம் தந்த ‘கிக்’ மேட்டர்

பாங்காங்கிலும் நான் ஏகபத்தினி விரதன்.; நான் செஞ்சதை தம்பி ராமையா இப்போ செய்றார் – சந்தானம் தந்த ‘கிக்’ மேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’.

இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ்.

தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், கூல் சுரேஷ், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார்.

சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கிக்

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ‘கிக்’ படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசும்போது…

“தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஒரே கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் பூசனிக்காயெய் உடைத்து, ஒரேகட்ட படபிடிப்பாக இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.

விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் வருவது போல ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோ கூடவே இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அண்ணன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கிக்

பல வருடங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பான நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.

மன்சூர் அலிகானை சார் ஒரு குழந்தை என்று சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங்காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங்காங் மாட்டிக்கொண்டார்.

அரண்மனை படத்திற்கு பிறகு கோவை சரளாவுடன் அக்காவுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எங்களுக்கான வசனங்கள் ஒர்க் அவுட் ஆனது போல இதிலும் வசனங்கள் இருக்கின்றன.

எவ்வளவோ படங்களில் நடித்துள்ள எனக்கு இத்தனை வருடங்களில் இப்போதுதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.. எப்போதும் என்னை சுற்றி பெண்கள் தான் இருப்பார்கள்.. என ஆச்சரியப்பட்டு என்னிடம் சொன்னார், செந்தில் அண்ணன். படப்பிடிப்பில் இருந்தே நடிகர் கவுண்டமணிக்கு அண்ணனுக்கு போன் செய்து அந்த தகவலை கூறி மகிழ்ந்தார்.

கிக்

கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு.. அங்கே பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார்.

பாங்காங்கில் சண்டைக் காட்சிகளை படமாக்கியபோது டேவிட் கேஸ்ட்டிலோ மாஸ்டர் முதல்நாளே பக்காவாக எனக்கு ஸ்ச்ண்ட் ரிகர்சல் கொடுத்து விட்டு தான் படமாக்கினார்.

பாங்காங் போனாலும் எல்லோரும் ஏகபத்தினி விரதன்களாக இருந்ததால் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம்.

இந்த #கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார் சந்தானம்.

கிக்

Santhanam funny about Bangkok incidents at Kick event

காதலர்களின் மனப்பிரவாகம்.; ‘வெத்துவேட்டு’ இயக்குநரின் அடுத்த ‘பரிவர்த்தனை’

காதலர்களின் மனப்பிரவாகம்.; ‘வெத்துவேட்டு’ இயக்குநரின் அடுத்த ‘பரிவர்த்தனை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’.

இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்:

வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது….

“காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை. அந்த மாயவலையில் சிக்கிக் கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் ” இப்பரிவர்த்தனை படம் என்றார்.

பரிவர்த்தனை

மேலும் அவர் கூறும்போது நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறோம். என்றார்.

அத்தோடு கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம்” என்றார்.

இப்படி காதலும் காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்ட படத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன், திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பரிவர்த்தனை

மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர்.

இப்படத்தினை மேலும் மெருகேற்றும் விதமாக இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒளிப்பதிவாளர் கோகுல், இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின், எடிட்டர் ரோலக்ஸ், நடனம் தீனா, பாடல் VJP.ரகுபதி, மக்கள் தொடர்பு மணவை புவன் ஆகியோரோடு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இளமாறன்வேணு இணைஇயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்திணை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்தின் இறுதி காட்சியை கண்டு வியந்து பாராட்டினர்.

பரிவர்த்தனை

Surjith and Swathi starrer Parivarthanai

More Articles
Follows