தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு புறம் தமிழக அரசியலில் தனக்கு அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர்.
தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தன் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட அனுமதித்துள்ளார் நடிகர் விஜய்.
தன் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை கொடுக்க மறுத்துள்ளது ஆணையம்.
அந்த விளக்கத்தில்.. “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
எனவே பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஜனவரி 29ல் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பணிகளை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.
பொது சின்னம் கிடைக்காத காரணத்தினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயேச்சையாக களமிறங்குகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
தங்கள் இயக்க ‘அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிப்பார்’ என விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்து இருந்தும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வேட்பாளர்களும் ரசிகர்களும் டென்ஷனில் உள்ளனர்.
Vijay silence makes his fans angry