தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எனக்கு நிறைய கடன்சுமை இருந்தது. எனவே நான் நிறைய சம்பாதிக்கவே சினிமாவிற்கு வந்தேன் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.
இவர் நடிகராவதற்கு முன்பு துபாய் நாட்டில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகே திருமணம் செய்துக்கொண்டார் . சினிமாவில் நடிக்க துவங்கினார்.
இவர் துபாய் தங்கியிருந்த போட்டோக்களை அடிக்கடி இணையத்தை காணலாம்.
இந்த நிலையில் இவர் தன் துபாய் நினைவுகளை துபாய் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
துபாய் அமீரகத்தின் 50வது பொன்விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார் விஜய்சேதுபதி.
அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த சிறந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார்.
பின்னர் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி அவர்கள் விஜய்சேதுபதிக்கு அந்த விருதை வழங்கினார்.
விஜய்சேதுபதி பேசும்போது.. “நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். நான் கடந்த 2000ம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். 3 ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தேன்.
இங்குள்ள தெருக்களில் எனது கனவுகளுடன் நடந்தேன். இங்கு வந்தபிறகு இது வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2வது தாய்நாடு போல துபாய் நாட்டை உணர்ந்தேன்.” இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.
Vijay Sethupathi shares his working experience in Dubai