தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘அசுரன்’ படத்தை அடுத்து சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன்.
இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிகிறார்.
ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையின் தழுவல் இப்படம் என கூறப்படுகிறது.
இப்பட சூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது.
இப்பட முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
கடும் குளிரில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பாரதிராஜா விலகிவிட்டார். பின்பு கிஷோர் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அத்தகவல் உறுதியாகவில்லை.
இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய்சேதுபதி கமிட்டான உடன் அவருக்கான காட்சிகளை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.
Vijay Sethupathi plays important role in Vetrimaan’s next