தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் படங்களில் நடிப்புடன் பாடலையும் பாடி வருகிறார்கள்.
இதில் சீனியர் நடிகரான கமல் அவர்கள் இளையராஜா, ஏஆர். ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
இவரை தொடர்ந்து விஜய்யும் இந்த சாதனையை படைக்க உள்ளார்.
இவர் இளையராஜா, தேவா, ஆகியோர்களின் இசையில் பாடிவிட்டார்.
இந்நிலையில் அட்லி இயக்கவுள்ள விஜய் 61 படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Vijay follows Kamalhassan in Songs Singing