மாநகராட்சி தேர்தல் களத்தில் தளபதி.; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

மாநகராட்சி தேர்தல் களத்தில் தளபதி.; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 170 போட்டியிட்டனர்.

இதில் 100 பேர் வெற்றி பெற்றதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

விஜய்யும் மகிழ்ச்சியில் அவர்களை நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்தினார்.

மேலும் வெற்றிப் பெற்றவர்களுடன் நடுவில் அமராமல் ஓரமாக அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் அனுமதியுடன் போட்டியிடவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அவர்கள் போட்டியிட உள்ளனர்.

Vijay allowed his fan club members to contest in local body election

ரஜினி மருமகன் அந்தஸ்தை வீசிய தனுஷ்,,; சமாதானம் பேசவந்த ரஜினியை தனுஷ் சந்திக்க மறுக்க இதான் காரணமா?

ரஜினி மருமகன் அந்தஸ்தை வீசிய தனுஷ்,,; சமாதானம் பேசவந்த ரஜினியை தனுஷ் சந்திக்க மறுக்க இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து தான் கோலிவட்டின் தற்போதை ஹாட் டாப்பிக்.

18 வருடங்களுக்கு முன் தனுஷ் ஒரு சிறிய நடிகராக இருந்தபோது ரஜினியின் மருமகன் என்ற பெரிய அந்தஸ்து அவருக்கு இந்தியளவில் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.

இன்றளவில் 2 தேசிய விருதுகளை வென்று பாலிவுட் அளவில் தனுஷ் அறியப்பட்டாலும் ரஜினியின் மருமகன் என்ற அடையாளமும் அவருடன் ஒட்டிக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில் அந்த அந்தஸ்தை வீசி எறிந்து தனுஷ் செல்ல காரணம் என்ன? கணவன் மனைவியரிடையே விரிசல் விழ யார் காரணம்? என பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தனுஷின் தந்தை கஸ்துரிராஜாவே… இது விவாகரத்து அல்ல. வழக்கமான கணவன் மனைவி சண்டை தான் என பேட்டியளித்துள்ளார்.

இந்த நிலையில் தன் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இடையே ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்க ரஜினி முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது பெரும் மரியாதையை தான் வைத்திருப்பதால் ரஜினியை சந்திக்க தனுஷ் மறுத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

Did Dhanush avoid meeting with Rajinikanth?

வேற லெவலில் VVS..; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன விஷால் பட ட்ரைலர்

வேற லெவலில் VVS..; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன விஷால் பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் விஷால்.

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும்.

இந்த படத்தை து. பா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் வெளியான 15 நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என் பி ஸ்ரீகாந்த் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

http://bit.ly/VVSOfficialTrailer

Vishal film trailer Veeramae Vaagai Soodum is on national trending

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து.. சௌந்தர்யா போட்ட பதிவு… ரஜினி கண்ணீர்.!

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து.. சௌந்தர்யா போட்ட பதிவு… ரஜினி கண்ணீர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு நாட்களாகவே கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்த செய்தி என்றால் அது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து செய்திதான்.

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும் பலர் அவர்கள் இணைய வேண்டும் எனவும் சிலர் அது அவர்களின் விருப்பம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுப்பற்றி ரஜினி குடும்ப தரப்பிலோ கஸ்தூரிராஜா குடும்ப தரப்பிலோ எவரும் வாய்திறக்கவில்லை..

இந்த நிலையில் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா தன் அப்பா & அக்கா உடன் இருக்கும் தங்கள் குழந்தைப்பருவ புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் மாற்றியுள்ளார்.

இனி எங்களுக்கு அப்பா தான் எல்லாமே என்பது போல உள்ளது.

(சௌந்தர்யாவும் விவகாரத்து பெற்று 2வது திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

சௌந்தர்யாவின் படத்திற்கு ஒரு ரஜினி ரசிகர் கமெண்ட் போடும் வகையில் கபாலி பட வசன வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார்.

அதில்…
“என் வாழ்க்கையில நான் இன்னும் என்னலாம் கொடுமைகள பார்க்கணும்னு இருக்கோ, எனக்கே தெரியல.

கனவுகளில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் கண் விழித்தவுடனேயே டக்குனு அந்த பிரச்சனைகளில இருந்து வெளியே வர மாதிரி என் வாழ்க்கையும் இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்” என ரஜினி கண்கலங்கியபடி பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதை ரஜினியின் மனக்குமுறலாக ரசிகர்கள் ஷேர் செய்து தலைவருடன் ஃபீல் செய்து வருகிறார்கள்.

Soundarya recent post after Dhanush and Aishwarya divorce issue

JUST IN லிப்ரா யுவன் கருபழனியப்பன் கூட்டணியில் ‘ஆண்டவர்’

JUST IN லிப்ரா யுவன் கருபழனியப்பன் கூட்டணியில் ‘ஆண்டவர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லிப்ரா புரொடக்சன். இந்த நிறுவனம் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனம் சார்பாக இறுதியாக வெளியான படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

இதில் படத்தில் சாந்தனு அதுல்யா பாக்யராஜ் ஊர்வசி உள்ளிடோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் மற்றும் யோகிபாவுவும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் ரவீந்தர். அந்த விடியோவில் பாலாஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதற்கு ரவிந்தர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

ஆண்டவர் என்ற இந்த படத்திற்கு தலைப்பு வைத்து டைட்டில் லுக் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை கருபழனியப்பன் இயக்க யுவன் இசையமைக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.

மற்ற கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Director Karu Palaniappan’s next movie is announced

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

முதலில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்யவில்லை என இயக்குனர் முத்தையா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘விருமன்’ பட தேன்மொழி கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால் அவர்களின கால்ஷீட் தேதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் ஷங்கரின் மகள் அதிதியிடம் பேசினார்களாம்.

சுல்தான் படத்தில் ஏற்கெனவே கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Muthaiah talks about heroine selection in Viruman

More Articles
Follows