வெற்றிமாறன் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் அடுத்த படத்தலைப்பு

வெற்றிமாறன் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் அடுத்த படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vetrimaaran and gv prakashஅதர்வா, ஸ்ரீதிவ்யா நடித்த ஈட்டி படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரவி அரசு.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை இன்று இரவு 9 மணிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஐங்கரன் என்று தலைப்பிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை ஜிவி. பிரகாஷின் அடங்காதே பட டீசர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

(நாங்கள் சொன்னதுபோலவே வெளியான ஐங்கரன் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ் இதோ.. )

இச்செய்தி வெளியாகி பல மணி நேரங்களுக்கு பின்னால்…

gvp ayngaran

‘ஜல்லிக்கட்டு’ வேண்டாம்… விவேக்குடன் மல்லுக்கட்டிய ரசிகர்கள்

‘ஜல்லிக்கட்டு’ வேண்டாம்… விவேக்குடன் மல்லுக்கட்டிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vivekhதமிழர்களின் வீரவிளையாட்டில் ஒன்று ஜல்லிக்கட்டு…

இதில் மாடு முட்டி பலர் காயமடைவதை சுட்டிக்காட்டி சின்ன கலைவாணர் விவேக் ஒரு படத்தில் காமெடி செய்திருப்பார்.

அந்த காமெடி வீடியோவை சிலர் இணையங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து விவேக் கூறியதாவது…

“ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துங்கள் என்று தான் அந்த காமெடியில் சொல்லியிருப்பேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விவேக்.

மேலும் மற்றொரு பதிவில்…

ஜல்லிக்கட்டில் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டினேன்! ஆனால் ஜல்லிக்கட்டுக்கே ஆபத்து வந்தால் சும்மா இருக்க மாட்டேன். I support jallikattu

என்று தெரிவித்துள்ளார்.

இவரின் ஜல்லிக்கட்டு தொடர்பான மற்ற கருத்துக்களை சன் டிவி பேட்டியில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய்சேதுபதி

விஜய்க்கு வழிவிட்டு ஒதுங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathiவிஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

இத்துடன் நிறைய படங்கள் மோதும் என அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அமைதியாக இருந்துவிட்டன.

இறுதியாக ஜனவரி 13ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த படமும் போட்டியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளனர்.

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாவது இங்கே கவனிக்கத்தக்கது.

‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு

‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஜல்லிக்கட்டை இந்தாண்டு பொங்கலுக்கு நடத்தியாக வேண்டும் என தமிழக மாணவர்கள் பல்வேறு இடங்களை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றாலும் சில இடங்களில் போலீசார் லத்திசார்ஜ் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக பேச சிம்பு பத்திரிகையாளர்களை அழைத்துள்ளார்.

மேலும் லத்திசார்ஜ் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதயம் வலிக்கிறது. உங்கள் சகோதரன் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எனவே சிம்பு ரசிகர் ஒருவர், நீங்கள் இப்படி பேசினால் உங்கள் மீது எல்லா வழக்குகளையும் போடுவார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு சிம்பு ஒப்புக் கொண்டு ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘பைரவா’வுக்கு கிடைத்த பெருமை

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘பைரவா’வுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijay‘பைரவா’ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உருவாகி வருவதால் அதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் பல மடங்கு உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் பைரவா படத்திற்காக 150அடி உயர விஜய் கட்அவுட்டை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சிறப்பு அனுமதியுடன் இந்த கட்அவுட்டை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றிலேயே இந்த அளவு உயரத்திற்கும் எந்த நடிகருக்கும் கட் அவுட் வைத்தது இல்லை என கூறப்படுகிறது.

‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

‘பைரவா’ படத்திற்கு தடை… விஜய்க்கு அடுத்த தலைவலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaஅண்மை காலமாக தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு, தடை என பல செய்திகள் வெளியாகின்றன.

இதில் விஜய் படங்களுக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த பொருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாய் ஒன்றை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஒரு அனிமேஷன் கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

மேலும் அதை பைரவா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் விஜய் படத்துக்கும் பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், விஜயா புரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால், தனது படத் தலைப்பான பைரவாவை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எதிர் மனுதாரரின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாதென தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் பைரவா படத்தயாரிப்பாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Bairavaa movie title case at High Court

More Articles
Follows