தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்தவர் வேலு நாச்சியார்.
ஆங்கிலேயர்களின் சதியால் கணவனை இழந்தவர். இதன்பின்னர் தனி ஆளாக தைரியமாக நின்று படை திரட்டி கொரில்லா போர் மூலம் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்தவர்.
நேற்று ஜனவரி 3ல் வேலு நாச்சியாரின் 292வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் வேலு நாச்சியாரின் வாழ்க்கையை சினிமாவாக இயக்கப்போவதாக சுசி.கணேசன் அறிவித்துள்ளார்.
இவர் கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம். என்கிறார்.
Velu Nachiyar biopic to be directed by Susi Ganesan