‘தில் ஹே கிரே’ படத்தை அடுத்து சுசி கணேசன் இயக்கும் படம்

‘தில் ஹே கிரே’ படத்தை அடுத்து சுசி கணேசன் இயக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசி கணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.

தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் சுசிகணேசன் தமிழில் இயக்கும் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார்.

1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் இந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளளது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத புதுமையான முயற்சிகளோடு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Director Susi Ganesan’s next film announcement is here

EXCLUSIVE எந்தா சாரே.. இங்ஙன கொந்து களைஞ்சல்லோ… ‘வேலன்-மீண்டும்’ குழுவினருக்கு வேண்டுகோள்

EXCLUSIVE எந்தா சாரே.. இங்ஙன கொந்து களைஞ்சல்லோ… ‘வேலன்-மீண்டும்’ குழுவினருக்கு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2021 கடந்த வாரம் டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ஒரு டஜன் தமிழ் படங்கள் ரிலீசானது.

இதில் கவின் இயக்கத்தில் முகேன் நடித்த படம் ‘வேலன்’ மற்றும் ஷரவண சுப்பையா இயக்கி நடித்த படம் கதிரவனின் ‘மீண்டும்’ ஆகிய படங்களும் உண்டு.

இந்த இரு படங்களிலும் மலையாளம் மொழி அதிகளவில் பேசப்பட்டது.

வேலன் படத்தில் தம்பி ராமையா மலையாளம் மொழி பேசுபவராக நடித்திருந்தார். அவருக்கு வேண்டுமென்றால் அது மலையாளமாக தெரிந்திருக்கலாம். ஆனால் படத்தை பார்க்கும் ரசிகர்கள் தான் பாவம்.

ஏற்கெனவே தம்பி ராமையா தன் ஓவர் ஆக்ட்டிங்கால் கத்தி கத்தி பேசுவார். தன் காட்சியில் தன்னுடைய ஆதிக்கம் அதிகளவில் இருக்க வேண்டும என விரும்புவார்.

அதுவும் வேலன் படத்தில் கத்தி கத்தி தமிழ் பேசி சில இடங்களில் மலையாளத்தை திணித்து பேசி நம்மை வெறுப்பேற்றி விட்டார்.

அதுபோல் மீண்டும் படத்தில் ஷரவண சுப்பையா, கதிரவன் மற்றும் அனகா ஆகியோர் மலையாளம் பேசுவதாக நினைத்து கடுப்பேற்றி விட்டார்கள்.

உதாரணத்திற்கு… நிங்கள் எந்தா விஜாரிச்சு… என்ற மலையாள வாக்கியத்திற்கு நீங்க என்ன நினைச்சீங்க? நீங்க என்ன யோசிச்சீங்க.? என்று தமிழில் அர்த்தம் உண்டு.

ஆனால் தம்பி ராமையா மற்றும் ஷரவண சுப்பையா பேசும்போது…

நீ என்ன யோசிச்சு.. என்று பேசுகின்றனர். அதாவது இது மலையாளம் என அவர்களாவே நினைத்து மலையாளம் பேசி அந்த மொழியை கொன்றுவிட்டார்கள்.

இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலையே தருகிறது. இதனால் படத்தை ரசிக்க முடியவில்லை என்பது பெரும் வருத்தம்.

ஒருவேளை கதைப்படி மலையாளம் பேசும் வார்த்தைகள் வந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு மலையாளம் டப்பிங் கொடுத்துவிடலாம். அப்போது தமிழில் சப்டைட்டில் கொடுத்துவிடலாம்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் பேசும்போது அவ்வளவு அழகாக பாலக்காட்டு மலையாளத்தை தமிழுடன் கலந்து அழகாக பேசுவார்.

அதுதான் நடிப்புக்கான ஓர் அர்ப்பணிப்பு. அதை கற்றுக் கொள்ளுங்கள் கலைஞர்களே…

அதுபோல் மலையாள நடிகர்கள் மோகன்லால் மம்முட்டி துல்கர் சல்மான் பஹத்பாசில் பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும்போது அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்கள். அது நமக்கு கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளது.

மலையாள கலைஞர்கள் நம் தமிழ் மொழிக்கு கொடுக்கும் மரியாதையை நாமும் மற்ற மொழிக்கும் அதன் கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டாமா.?

Common man request to Meendum and Velan movie team

காவல்துறை இனியாவது கவனிக்குமா.?; விசாரணை – ஜெய் பீம் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘ரைட்டர்’

காவல்துறை இனியாவது கவனிக்குமா.?; விசாரணை – ஜெய் பீம் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘ரைட்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா, ஹரி கிருஷ்ணா, சுப்ரமணியம் சிவா, மேற்கு தொடர்ச்சி மலை அந்தோணி என பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “ரைட்டர்”.

இப்படம் வெளியான முதல் தொடர்ந்து நல்லதொரு விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எண்ணிடாத, ஒரு கதையை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர் ஃப்ராங்க்ளினை கொண்டாடலாம் என்று கூறிவருகின்றனர்.

காவல்துறையில் அதிகாரமற்ற காவலர்களின் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியமைக்காக படக்குழுவினர்களுக்கு பெரும் நன்றிகளை கூறிக் கொள்ளலாம்.

தொடர்ந்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காவலர்களின் அதிகாரங்களை திமிறி வெளிக்காட்டி வந்த படங்களான விசாரணை, ஜெய் பீம் படங்களின் வரிசையில் ரைட்டர் படமும் இணைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தினை தயாரித்திருந்தது பா இரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நீலம் நிறுவனத்திற்கு மற்றுமொரு மகுடமாக சேர்ந்திருக்கிறது “ரைட்டர்”

விசாரணை ஜெய்பீம் மற்றும் ரைட்டர் ஆகிய இந்த 3 படங்களுமே பொய் வழக்குகளை போட்டு அப்பாவி ஜனங்களை மிரட்டி கைதியாக்கும் காவலர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் மக்கள் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது தங்கள் தவறுகளை களைந்து காவல்துறை கண்ணியமிக்க காவல்துறையாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

Writer Impact Will Govt notice Innocent Peoples in Police Custody

‘லேபர்’ படத்திற்கு மக்கள் ஆதரவு.; சந்தோஷத்தில் சத்தியபதி குழுவினர்

‘லேபர்’ படத்திற்கு மக்கள் ஆதரவு.; சந்தோஷத்தில் சத்தியபதி குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி சத்தியபதி இயக்கி ஒளிப்பதிவு செய்த ‘லேபர்’ திரைப்படம் ரிலீசானது.

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர்.

நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார் படத்தொகுப்பை மேற்கொள்ள ஒலி கலவையை கிருஷ்ணமூர்த்தி செய்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு தற்போது தியேட்டர்களின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லேபர் பட இயக்குனர் சத்தியபதி தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சினிமா வளியவனுக்கும் எளியவனுக்கும் பொது என்பதை ‘லேபர்’ படம் உணர்த்தியுள்ளது.
பலபடங்கள் ஆண்டு இறுதியில் வந்தாலும் பலகோடி விளம்பரம் செய்திருந்தாலும். எங்கள் படம் நம்பிக்கையை வைத்துக்கொண்டு களத்தில் இறங்கியது.

சென்னை காசி டாக்கீஸில் எங்களுக்கு வெள்ளி சனி ஞாயிறு என்று மூன்றுநாள் ஒதுக்கப்பட்டது. மழையில் கூட நேற்றும் இன்றும் பார்த்தவர்கள் பாராட்டால் வரும் புதன்வரை நாட்களை கூட்டியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி திருச்சி ஏரியாக்களில் இரண்டு தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று காசி டாக்கீஸில் கூட்டம் சற்றே அதிகமானது கவுண்டரிலேயே லேபர் படம் டிக்கெட் கேட்டுவாங்கும் காட்சிகளை பார்க்கும்போது சந்தோசம்.

மழையால் போஸ்டர்கூட நாங்கள் ஒட்டவில்லை. இன்றுதான் ஒட்ட சொல்லியிருக்கிறோம்.

தனிமரம் தோப்பாகாது பழமொழி. ஒரு வாழைகன்றை நடுங்கள் போதும் தோப்பாகிவிடும். எனவே எங்களுக்கே தெரியாமல் எங்களை உயர்த்தியவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இந்த இனிய தருணத்தில் உங்களுக்கும் உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இவன்
சத்தியபதி இயக்குனர்.

Labour movie director Sathyapathy statement

பாண்டிச்சேரி டூ லண்டன் ட்ரீப்பில் சிவகார்த்திகேயன்-அனுதீப் குழுவினர்

பாண்டிச்சேரி டூ லண்டன் ட்ரீப்பில் சிவகார்த்திகேயன்-அனுதீப் குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இப்படத்தினை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கவிருக்கிறார்.

தெலுங்கில் காமெடி ஜார்னரில் எடுக்கப்பட்ட ஹிட் அடித்த “jathi ratnalu” என்ற படத்தினை இயக்கிய அனுதீப், தமிழில் சிவகார்த்திகேயன் மூலமாக அடியெடுத்து வைக்கிறார்.

மேலும், பல ப்ளாக் பஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவரும், தற்போது ஷங்கர் படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

இப்படமும் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

லண்டன் மற்றும் பாண்டிச்சேரியை மையப்படுத்தி கதை நகரவிருப்பதாக தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில இந்த படம் உருவாகவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் டூயட் பாடும் சித்தி

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் டூயட் பாடும் சித்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்த இவர் மும்பையைச் சேர்ந்தவர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில், சிலம்பரசன் TR முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘வென்று தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமாகிறார்.

தற்போது படக்குழு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Official Simbus heroine Siddhi Idnani in Venthu Thaninthathu Kaadu

More Articles
Follows