காந்தியின் தனிச் செயலர் வெளியிட்ட ‘வெல்கம் பேக் காந்தி’ பட பாடல்

காந்தியின் தனிச் செயலர் வெளியிட்ட ‘வெல்கம் பேக் காந்தி’ பட பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaikom Vijayalakshmi sings for Welcome Back Gandhi movie‘வெல்கம் பேக் காந்தி’ படத்திற்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்டார் மகாத்மா காந்தியின் தனிச் செயலர் திரு வி. கல்யாணம்.

‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது.

இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

இப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இப்போது இந்தப்பாடலை ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார்.

படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர்.

காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு ஒரு புகழ் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை தயாரித்துள்ள ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்தினர்.

இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.

வந்தே மாதரம்

தங்கள் அன்புள்ள

அ.பாலகிருஷ்ணன் (இயக்குனர், தயாரிப்பாளர்)

Vaikom Vijayalakshmi sings for Welcome Back Gandhi movie

KGF ஹீரோ யஷ் உடன் ஷாம் மோதும் ‘சூர்ய வம்சி’

KGF ஹீரோ யஷ் உடன் ஷாம் மோதும் ‘சூர்ய வம்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF fame Yash and Shaam starring Surya Vamsiமஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’.

பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.

இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ்.

இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.

ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது.

ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ்.

KGF fame Yash and Shaam starring Surya Vamsi

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு: ஆண்ட்ரூ
இசை: ஹரிகிருஷ்ணா
கலை: T.ஸ்ரீனிவாஸ்
படத்தொகுப்பு: KM.பிரகாஷ்
இணை தயாரிப்பு: ஷபீர் பதான்
தயாரிப்பு : கே.மஞ்சு
இயக்கம்: மகேஷ்ராவ்

KGF fame Yash and Shaam starring Surya Vamsi

படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash in bachelorஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோலகலமாக நேற்று (செப்டம்பர் 30) துவங்கியது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் பற்றி பகிர்ந்து கொண்டது…

படத்தை பற்றிய நல்ல மனங்களின் வாழ்த்து பரவிய சூழலில் நேற்று கொண்டாட்டத்துடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய பகுதிகளை இங்கு படமாக்கிவிட்டு மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர உள்ளோம். ஆரம்பம் முதலே படத்தின் மீது நடிகர் ஜீ வி பிரகாஷ் கொண்டிருக்கும் ஆர்வம் பெரும் உற்சாகத்தை தருகிறது. அவராகவே மீண்டும் மீண்டும் பல டேக்குகளை கேட்டு நடிக்கிறார். நாங்கள் திருப்தியடைந்த போதிலும் அவர் டேக்குகள் கேட்டு நடிக்கிறார். படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அவர் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்.
அவரது இந்த ஆர்வம் மொத்த படக்குழுவையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் காட்சிகளை படமாக்கிய பிறகு பெங்களூரில் படத்தின் வேறு பகுதிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களின் வெகு இயல்பான காதலை, அப்பட்டமாக சொல்லக்கூடிய காதல் கதை தான் “பேச்சுலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாகவும் திவ்ய பாரதி நாயகியாகவும் நடிக்கிறார்கள். யூடியூப் நக்கலைட்ஸ் மூலம் பிரபலமான அருண்குமார் உட்பட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். ஜீ வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். Axess Film Factory சார்பில் G டில்லி பாபு இப்படத்தினை தயாரிக்கிறார்.

தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ சொல்லும் விஜய்யின் குட்டிக் கதை

தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ சொல்லும் விஜய்யின் குட்டிக் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petromax trailer‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா, யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட் பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரில் விஜய் ஒரு குட்டி கதை சொல்வது போல் காட்சிகள் உள்ளன.

ஐப்ரோ அழகி ப்ரியா வாரியரை கவர்ந்த துருவ் விக்ரம்

ஐப்ரோ அழகி ப்ரியா வாரியரை கவர்ந்த துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Prakash Varrierநடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து இதுவரை ஒரு படம் ரிலீசாகவில்லை. பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்தார். ஆனால் படம் திருப்தியில்லை எனவே படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

இதனையடுத்து துருவ் ஹீரோவாக நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இருந்தபோதிலும் துருவ்வுக்கு இளம் ரசிகைகள் நிறைய பேர் உள்ளனர். அவரும் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஒரு அடார் லவ் பட புகழ் கண்ணழகி பிரியா வாரியர் தன் இன்ஸ்டாகிராமில் துருவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரியா வாரியருடன் முதல் படத்தில் ஜோடியாக ரோஷனுடன் காதல் இருப்பதாகவும் மலையாள உலகில் பேசப்படுகிறது.

கமலுக்கு தேவர் மகன் 2; விஜய்சேதுபதிக்கு ஒரு படம்.. சேரன் ஓபன் டாக்

கமலுக்கு தேவர் மகன் 2; விஜய்சேதுபதிக்கு ஒரு படம்.. சேரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Cheranபாரதி கண்ணம்மா, தேசிய கீதம், ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், தவமாய் தவமிருந்து என தரமான படங்களை சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் சேரன்.

அண்மையில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் சென்னை வடபழனியில் ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் பங்கேற்றார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் விஜய்சேதுபதி தான்.

நீங்கள் ஒரு வெற்றி இயக்குநர் என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் இளைஞர்களிடம் சென்று சேரலாம்.

எனவே நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்றேன்.

கூடிய விரைவில் விஜய்சேதுபதியை இயக்குவேன்.

கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க ஆசை. கமல் சம்மதித்தால் எடுப்பேன். இதை கமலிடம் தெரிவித்து விட்டேன்” என்றார் சேரன்.

More Articles
Follows