திரைப்படமாகிறது திருக்குறள்.; ‘காமராஜ் – மகாத்மா காந்தி’ படங்களை தயாரித்தவர்களின் அடுத்த முயற்சி

திரைப்படமாகிறது திருக்குறள்.; ‘காமராஜ் – மகாத்மா காந்தி’ படங்களை தயாரித்தவர்களின் அடுத்த முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.

தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை என்றாலும், ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான், தமிழின், தமிழ் பண்பாட்டின், தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் அண்ணாந்து பார்த்தது.

தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷ்ய எழுத்தாளர் ‘டால்ஸ்டாய்’ ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது.

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானித்தோம்.

பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும்; இசையைப் போல; ஓவியத்தைப் போல;

திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம்.

இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.

அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.

ஒரு படைப்பின் வழியே படைப்பாளியை அறிந்து கொள்ள முடியும். ஒரு குறளை காட்சியமைக்க முயலும்போது, அதனூடாக திருவள்ளுவரும், ரத்தமும், சதையுமாக உயிர்த்தெழுந்து வருகிறார். அவ்வகையில் திரைக்கதை முழுவதும் திருவள்ளுவரும் வியாபித்துள்ளார்.
நிறைந்துள்ளார். மலரில் மணம் போல..

‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என தீட்சண்யமான கண்களோடு, அறச் சீற்றம் கொள்ளும் வள்ளுவர், “அனிச்சமும் அன்னத்தின் தூவியும்’ என மென்மையான காதலனாக கனிந்தும் நிற்கிறார்.

திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.

அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே!

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

இத்திரைப்படத்திற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்க, வரும் தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று இத்திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெறுகிறது.

A.J.பாலகிருஷ்ணன்

Thirukural will be cinema in Balakrishnan direction

இந்திய ரசிகர்களை காக்க வைத்த ‘காந்தாரா சாப்டர் 1’ செம அப்டேட்

இந்திய ரசிகர்களை காக்க வைத்த ‘காந்தாரா சாப்டர் 1’ செம அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெய்வீகத்துடன் கூடிய ‘காந்தாரா- சாப்டர் 1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக டீசரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ‘காந்தாரா ஏ லெஜன்ட்’ எனும் திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘காந்தாரா- சாப்டர் 1’ எனும் படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவரவிருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக காணொளி தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தீவிரமிக்க மற்றும் தெய்வீக தன்மையுடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் அச்சுறுத்தும் வகையிலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தைக் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்… இயக்குநர் தனக்காக உருவாக்கிய தொலைநோக்கு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் எதிரொலித்த பழக்கமான கர்ஜனை மீண்டும் இந்த டீசரில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு புராண கதையின் பிறப்பிற்கான பின்னணியை உருவாக்குகிறது. மேலும் புதிய அனுபவத்தின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.

டீசரில் கதையின் நாயகனான ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரத்தின் தீவிர கண்ணோட்டத்தில் பார்வையாளர்களை மூழ்கடித்து, சஸ்பென்ஸ் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இது பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு பார்வையாளர்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்திய மயக்கும் ஆத்மார்த்தமான இசை… இந்த புதிய திரைப்படத்தின் காணொளியில் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘காந்தாரா – சாப்டர் 1’ திரைப்படம் வெளியாகும் ஏழு மொழிகளில் ஒவ்வொன்றையும் பிரத்யேகமாக குறிப்பிடும் வகையில் ஏழு வெவ்வேறு இசை ராகங்களுடன் டீசர் நிறைவடைகிறது.

‘காந்தாரா’ கடந்த ஆண்டு உலகளாவிய சினிமாவில் புயல் போல் தாக்கியது. மனித குலத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான சிக்கலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற பாணியிலான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பான் இந்திய அளவிலான சினிமா அனுபவங்களை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘காந்தாரா – சாப்டர் 1’ மூலம் மீண்டும் தெய்வீகத்துடன் கூடிய அனுபவ எல்லையை மறு வரையறை செய்கிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக ஹோம்பலே ஃபிலிம்ஸ் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கேஜிஎப் அத்தியாயம் 2’ மற்றும் ‘காந்தாரா’ ஆகிய இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டுகளுடன் உலக அளவில் 1600 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்தது. வரவிருக்கும் வெளியீடான ‘சலார்’ ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் அமையவிருக்கிறது. இதன் முன்னோட்டம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘காந்தாரா – சாப்டர் 1’ எனும் திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு மொழிகளில்.. அதன் பார்வையாளர்களை கவரும் வகையிலான திட்டமும் உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாத இறுதியில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் தற்போது முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், படத்தின் முதல் தோற்றம்… அசாதாரணமான கதை சொல்லல் நிறைந்த ஒரு இணையற்ற உலகத்திற்கான பயணத்தை உறுதி செய்கிறது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது. மொழிகளின் எல்லைகளைக் கடந்த ஒரு அதிவேக அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இணைந்து ‘காந்தாரா- சாப்டர் 1 ‘படத்தின் மூலம் தெய்வீக அனுபவத்தையும், அதன் எல்லையை மறு வரையறை செய்வதையும் தொடர்கின்றனர்.

Kanthara Chapter 1 will release in 7 languages

ரீ-ரிலீஸ் போட்டியில் கவிதாலயா – ராஜ்கமல் பிலிம்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள்

ரீ-ரிலீஸ் போட்டியில் கவிதாலயா – ராஜ்கமல் பிலிம்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில காலங்களுக்கு முன்பு எல்லாம்… ஒரு படத்தை உருவாக்கி அதை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனால் இன்றைய காலகட்டங்களில் ஒரு படத்தை தியேட்டரில் செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களிலும் படத்தை வியாபாரம் ஆக்க தொடங்கிவிட்டனர் தயாரிப்பாளர்கள்.

முக்கியமாக கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களில் வியாபாரமும் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன. இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரம் பிரசாதமாகும்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மற்றொரு முறையையும் தற்போது கையாண்டு வருகின்றனர். அவர்கள் தயாரிப்பில் வெளியான வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான பழைய படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இது காலகாலமாக நடைபெற்று வந்தாலும் தற்போது இது பல்வேறு தரப்பிலும் புது வேகத்தை உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ரஜினி தன்னுடைய ‘பாபா’ படத்தை ரீ ரிலீஸ் செய்து வெற்றி கண்டார்.

அதுபோல சமீபத்தில் ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரீ ரிலீஸ் ஆனது. இது கமல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்த டிசம்பர் மாதம் கமலஹாசனின் ஆளவந்தான் திரைப்படமும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

மேலும் கவிதாலயா நிறுவனம் தன்னுடைய மற்ற படங்கையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இத்துடன் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த புதிய வியாபார உக்தியை கையில் எடுத்துள்ளது.

அவர்களும் தங்களது சூப்பர் ஹிட்டான பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Re Release competition at Kollywood industry

ரஜினி கமல் விஜய் அஜித் போல வில்லத்தனம் செய்ய ஆசை… – ஹரீஷ் கல்யாண்

ரஜினி கமல் விஜய் அஜித் போல வில்லத்தனம் செய்ய ஆசை… – ஹரீஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரிஷ் கல்யாண் இந்துஜா இணைந்து நடித்த உள்ள பார்க்கிங் படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசும்போது….

“ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது.

எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

I wish to do negative character like Top heroes says Harish Kalyan

மனைவி கர்ப்பம்.. ஒரே மாதிரியான கேரக்டர் போர் – இந்துஜா

மனைவி கர்ப்பம்.. ஒரே மாதிரியான கேரக்டர் போர் – இந்துஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்டையில் நடந்தது.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ்…

“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி.

நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார்.

அந்தப் படம்தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி. ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

“இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள்.

‘மாநகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர்…

“இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி.

இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் அருண்ராஜ் காமராஜ்…

“படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்”.

இயக்குநர் ரத்னகுமார்…

“தயாரிப்பாளரின் ஸ்ரீனிஸின் பிறந்தநாள் இன்று கிடையாது. டிசம்பர் 1தான். இயக்குநர் ராமும் நன்றாக செய்துள்ளார். இந்த படத்தின் டீமோடு எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஹரிஷ், பிரார்த்தனா, இந்துஜா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளியான பின்பே உங்களுக்கேத் தெரியும்”.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “பக்கத்துவீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் சண்டைதான் இந்தப் படம். ரொம்ப எளிமையான கதை என்பதை விட சாமானியர்களின் பிரச்சினையைப் பேசும் படம்.

‘குட்நைட்’ படத்தைப் போல எளிய கதையாக இருக்கும். ஹரிஷ், இந்துஜா என அனைவருமே சின்சியரான திறமையான நடிகர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்….

“இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும்.

எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார்.

நடிகை இந்துஜா…

“இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது.

ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது.

ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர்.

பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி”.

இயக்குநர் ராம்,…

“எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது.

இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன்.

ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்.

இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

இந்துஜா

Same character role boring says Indhuja

3 ஹீரோயின்ஸ் உடன் நான்… கீர்த்தி கண்டுக்கல.; புது மாப்பிள்ளை அசோக் செல்வன்

3 ஹீரோயின்ஸ் உடன் நான்… கீர்த்தி கண்டுக்கல.; புது மாப்பிள்ளை அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசும்போது…

” சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம்.

இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்.

படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது…

”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் நண்பர் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம்.

இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்., படம் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறோம்.

பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர். அவர் தான் இயக்குநர் கார்த்திகேயனை எனக்கு அறிமுகப்படுத்தினார். கார்த்திகேயன் கதை சொல்லும் போது எனக்கு கதை மிகவும் பிடித்தது. இது போன்ற கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்று எனக்குத் தோன்றியது.

மூன்றுவித காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. இதில் கல்லூரி கால வாழ்க்கையை முதலாவது ஷெட்யூலில் படப்பிடிப்பு செய்தோம். அதில் நான் ஒளிப்பதிவு செய்தேன். பிறகு என் சீடர் தினேஷ் இரண்டாம் ஷெட்யூல் அதாவது பள்ளிகால வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்தான்… பிரபு ராகவ் கல்லூரி காலத்திற்குப் பின்னர் வரும் வாழ்க்கைப் பகுதியை ஒளிப்பதிவு செய்தார். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.

படத்தின் மற்றொரு ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமன் பேசும் போது…

”ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என் குரு. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் குருநாதருக்கும், அதை ஏற்றுக் கொண்டு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன், நாயகன் அசோக் செல்வன் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி ”என்று பேசினார்.

மூன்றாவது ஒளிப்பதிவாளரான பிரபு ராகவ் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. நாயகன் அசோக் செல்வன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ”என்று பேசினார்.

நக்சலைட் யூடியூப் புகழ் நடிகர் அருண் பேசும் போது…

”இந்த சபாநாயகன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. என் திரைப்பயணத்தில் இப்படி ஒரு முக்கியமான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த இயக்குநரின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த சக யூடியூபர்ஸ் ஆன ஜெய்சீலன் ஸ்ரீராம் போன்றோருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களோடு இணைந்து நடித்தது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம். அது போல் மைக்கேல் அண்ணன் உடன் நடித்ததும் மறக்கமுடியாத அனுபவம். அவருடனான காட்சிகள் இல்லை என்றாலும் கூட, எங்களுக்கு பின்னாலிருந்து பெரும் ஊக்கம் கொடுத்தார். பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவில் நடித்ததை கெளரவமாக கருதுகிறேன். அவருக்கும் மற்ற கேமராமேன்களுக்கும் என் நன்றி, பாடல்கள் மிகவும் சென்சேஷனாக உள்ளது. சிறப்பான பாடல்களை இப்படத்திற்கு கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. அசோக் சாருக்கு நன்றி.

முதல் நாள் காட்சி சூட் செய்யும் போது எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. நான் அந்த குழப்பத்திலும் அசோக்செல்வன் சாருடன் இணைந்து நடிக்கிறோம் என்கின்ற பதட்டத்திலும் ஏதோ நடித்தேன். அதை புரிந்து கொண்டு அசோக்செல்வன் சார் என்னிடம் வந்து பேசினார். நீ என்ன யோசிக்கிறாய்.. உனக்கு என்ன பயம் என்று எனக்குத் தெரியும்… இது நம்ம படம்.. இப்படத்தின் வெற்றிக்கு நாம் உழைக்கிறோம். கேசுவலாக இரு.. கோயம்புத்தூரில் உன் நண்பர்களுடன் நடிக்கும் போது எப்படி இருப்பாயோ அப்படியே இரு.. நான் ஒரு ஹீரோ என்பதை எல்லாம் மறந்துவிடு என்று என் தயக்கங்களை போக்கினார். அவருக்கு மிக்க நன்றி அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு பின்நாளிலும் கண்டிப்பாக உதவும் என்று தோன்றுகிறது.. சபாநாயகன் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்தோடு பாருங்கள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

சபா நாயகன்

நடிகை விவியா பேசும் போது…

“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி. என்னுடைய தாய்மொழி மலையாளம் என்பதால் என்னுடைய தமிழ் சிறப்பாக இருக்காது. மன்னிக்கவும். இது என் முதல் தமிழ்ப்படம் எல்லோரும் படத்திற்கு ஆதரவு தந்து இதை ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்க கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

எருமை சாணி யூடியூப் புகழ் நடிகர் ஜெய்சீலன் பேசும் போது…

“இது என் திரைபயணத்தில் ஒரு முக்கியமான இலக்கு என்று சொல்லுவேன். யூடியூப் சேனல் மூலமாக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனை சென்று அடைந்து, இன்று அவர் இயக்கிய திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இந்த மேடை மீது நின்று கொண்டிருக்கிறேன். இயக்குநரின் பெயர் சி.எஸ்.கார்த்திகேயன். அதாவது சுருக்கமாக சி.எஸ்.கே. சி.எஸ்.கேவின் ரிசல்ட் நாம் அனைவருமே அறிவோம். இயக்குநரின் ரிசல்ட்டும் அது போன்ற வெற்றியாகத் தான் இருக்கப் போகிறது. சபாநாயகன் திரைப்படத்தின் டீம் பெரிய டீம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வசன உச்சரிப்புகளில் மிகவும் கவனமாக இருப்பார். நாங்களும் சிறப்பாக மனப்பாடம் செய்துவிட்டு ஸ்பாட்டில் ஏதோ உளறிக் கொண்டு இருப்போம். டங்க் ட்விஸ்டர் போல இருக்கும். ஜாலியாக வேலை வாங்கக் கூடிய நல்ல இயக்குநர். இரண்டாவது ஷெட்யூல் சூட்டிங் செய்யும் போது காலில் அடிபட்டுவிட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் படப்பிடிப்புத் தளத்தில் படுத்துக் கொண்டே டைரக்ட் செய்தார். அருண் அண்ணா சொல்லியது போல் அசோக் செல்வன் சார் மிகச் சிறந்த ஐஸ் ப்ரேக்கர்.

நம்மிடம் இருக்கும் தயக்கங்களை அவரே புரிந்து கொண்டு அவைகளை உடைத்து எறிவார். அவர் அழும் காட்சியின் போது அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடிக்க வேண்டும். அவரின் தலைமுடி கலைந்துவிடுமோ என்கின்ற தயக்கத்தில் பட்டும் படாமல் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடித்தேன். அதை புரிந்து கொண்டவர், இந்த டேக் நன்றாக வர வேண்டும் என்றால், நீ உன் நண்பனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல் இயல்பாக செய், முடி கலைந்தால் சரி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறி தைரியம் கொடுத்தார். சபா என்கின்ற வார்த்தையை திருப்பிப் போட்டால் பாசம் என்று வரும், அவர் ஒரு பாச நாயகன். அவருக்கு இப்படத்தில் எல்லாமே மூணு தான், அஸிஸ்டெண்ட் மூணு பேர், ஹீரோயின் மூன்று பேர், நண்பர்கள் மூன்று பேர், நித்தம் ஒரு வானம், போர் தொழில், அதைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக இந்த சபா நாயகன் இருக்கும்.

படப்பிடிப்பு தளத்தில் அசோக் செல்வன் சாரை மச்சான் மச்சான் என்று கூப்பிடுவோம். பிறகு சார் என்று சொல்லுவோம். ஆனால் படத்தில் அவரின் அக்காவாக நடித்தவரைப் பார்த்தவுடன் அவரை எப்பொழுதுமே மச்சான் என்று கூப்பிடத் துவங்கிவிட்டேன். லியோன் ஜேம்ஸ் அவர்கள் இசையில் நடித்ததும், பாலசுப்ரமனியம் சார் ஒளிப்பதிவில் நடித்ததும் மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். செடி வளர மண் முக்கியம் தயாரிப்பாளர் அய்யப்பன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த சபாநாயகன் என்னும் செடி வளர அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான கார்த்திகா முரளிதரன் பேசும் போது…

”தமிழில் பேசுவது கடினம், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது தமிழில் என் முதல் படம். தமிழ் இந்த இண்டெஸ்ட்ரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, மதன் சார், அய்யப்பன் சார் என என் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அசோக்செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே சப்போர்ட்டிவ்வாக இருந்தார். எனக்கு ஆடிஷன் பாலசுப்ரமணியன் சார் கேமராவில் தான் நடந்தது. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.

பிரபு சார் என்னை மிகவும் அழகாக காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி. இது ஒருவகை நாஸ்டால்ஜியா ப்லிம், எல்லாவித வயதினருக்குமான காட்சிகள் படத்தில் இருக்கும். பள்ளி கால, கல்லூரி கால, மணவாழ்க்கை கால கட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் இப்படத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இந்தக் கதையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்யப்பன் ஞானவேல் அவர்கள் பேசும் போது…

”இப்படத்திற்கு என்னையும் சேர்த்து மூன்று தயாரிப்பாளர்கள். அரவிந்தன், மேகவாணன் என இன்னும் இருவரிருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சார்பாகவும் நான் உங்களிடம் பேசுகிறேன்.

இது ஒரு ஜாலியான படம். மூன்று புதுமுக யூடியூபர்ஸ், அருண் ஸ்ரீராம், ஜெயசீலன், இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மூன்று கேமராமேன்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டு எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லுவேன். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. அவருக்கும் எங்கள் நன்றி., பிரபு ராகவ் ஆரம்பத்தில் இப்படத்தில் பணியாற்ற மிகவும் பயந்தார். அவரின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் எங்களின் நண்பர்.

ஒரு விசயம் வேண்டும் என்றால் கண்டிப்பாக அது அவருக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். நல்ல நேர்மறையான சிந்தனைகள் எண்ணங்கள் கொண்ட இயக்குநர், அவருக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது செட்யூலில் கால் உடைந்த போதும் படப்பிடிப்பை எந்தவித தாமதமும் இன்றி முடித்துக் கொடுத்தார்.

பாலிவுட்டில் புகழ்பெற்ற பி.கே. 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கேமராமேன் ஆன முரளிதரனின் மகள் தான் கார்த்திகா, அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். எடிட்டர் கணேஷ் என் நண்பர் தான். அயலி, விலங்கு போன்றவற்றில் சிறப்பாக எடிட்டிங் செய்து இருந்தார்.

இப்படத்திலும் அவரின் எடிட்டிங் பணி சிறப்பாக இருந்தது. என் நண்பரின் நண்பர். லியோன் ஜேம்ஸ் மியூசிக்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

எங்களின் வெல் விஷ்சர்ஸ். முதலில் ஜேம்ஸ் அவர் தான் இந்த பிராஜெக்ட் துவங்க காரணம், அடுத்து குமார் அண்ணன் அவரும் தயாரிப்பாளர் தான், என்கரேஜ் செய்து பல ஆலோசனைகள் கொடுத்தார், அடுத்து மதன் சார் அவருக்கு நன்றி. அவர் எங்களுக்கு மெண்டார் போல செயல்பட்டு வருகிறார்.

அசோக் செல்வனுக்கு நன்றி, ஜாலியாக பழகக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேசுவார், பந்தா இல்லாதவர், சமீபத்தில் தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்கும் சேர்த்து அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் அசோக் செல்வன் பேசும் போது…

”எல்லோருக்கும் வணக்கம். எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம்.

சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது.

இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஜெய்சீலனை ஜூனியர் சிவகார்த்திகேயன் என்றே சொல்லுவேன். தயாரிப்பாளர் அய்யப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார்.

இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. பாலசுப்ரமனியம் சார், தினேஷ், பிரபு ராகவ் அனைவருக்கும் நன்றி. மதன் சார் ஆபிஸில் பலமுறை காத்து இருந்திருக்கிறேன்.

இன்று அவர் வழிநடத்தி செல்லும் தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும்.

மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். பத்திரிக்கை நண்பர்கள் என் பிற படங்களுக்குக் கொடுத்த அதே ஆதரவை இப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சபா நாயகன்

Ashok Selvan speaks about Sabanayagan and movie

More Articles
Follows