தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இதில் ஒரு சில படங்களில் அவர் நாயகனாகவும் நடித்துள்ளார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’திருமணம்’ என்ற படத்தை இயக்கி அதில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சீமா என்.நாயர், அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
யுகபாரதி, லலிதானந்த், சேரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
படத்தின் தலைப்பு ’திருமணம்’ என்பதல் அதற்கேற்ப வாசலில் பிரம்மாண்டமான அலங்கார தூண்கள் இருக்க, தியேட்டர் நுழை வாயில் வரை தென்னங்கீற்றுகள், வாழை மரம், மேள தாளம், படக்குழுவினர் அனைவரும் பட்டு புடவை, பட்டு வேட்டி சட்டை, பழைய காலத்து குழாய் ஒலிபெருக்கி, அதில் பழைய பாடல்கள் என்று திருமண நிகழ்வை நம் கண் முன் நிறுத்தினார்கள்.
பிரேம்நாத் சிதம்பரம் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை.
Cheran decorated Kamala Theatre as Marriage hall for his Thirumanam audio launch