‘லியோ’ படத்தில் ரெண்டு விஜய் கேரக்டர்.; யாருக்கு யார் ஜோடி?

‘லியோ’ படத்தில் ரெண்டு விஜய் கேரக்டர்.; யாருக்கு யார் ஜோடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

லியோ என்ற கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவும், பார்த்திபன் என்ற மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியா ஆனந்த்தும் ஜோடியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னை ஷெட்யூலை முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்ல உள்ளது.

Two Vijay characters in ‘Leo’ film.; Who is paired with whom?

என்னுடன் நடித்த பிறகே பிஸியாக இருக்கிறேன்னு மனோபாலா சொல்வார் – மன்சூர் அலிகான்

என்னுடன் நடித்த பிறகே பிஸியாக இருக்கிறேன்னு மனோபாலா சொல்வார் – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது…

“இயக்குனர் மனோபாலா முதன் முதலில் நட்புக்காக என்கிற படத்தில் எனது உதவியாளராகத் தான் ஒரு நடிகராக அறிமுகமானார். படப்பிடிப்பில் இருவரும் பல விஷயங்களை ஜாலியாக பகிர்ந்து கொண்டோம்.

உன்னுடன் நடித்த பின்னர் தான், நான் இப்போது பிஸியான நடிகராக இருக்கிறேன் என்று அவ்வப்போது என்னிடம் கூறுவார்.

இங்கே மறைந்த இந்த மூவரும் நடிகர் சங்க கட்டிடத்தில் எப்படி எல்லாம் பேசி மகிழலாம் என நினைத்திருப்பார்கள்.

அதற்காக உடனடியாக நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்கும் வேலைகள் துரிதப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

Manobala would say that he is busy only after acting with me – Mansoor Ali Khan

விவேக் போல இயக்குநர் பாலசந்தர் பெயரிலும் தெரு வேண்டும் – பூச்சி முருகன்

விவேக் போல இயக்குநர் பாலசந்தர் பெயரிலும் தெரு வேண்டும் – பூச்சி முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது…

‘மனோபாலா இல்லை என்பது போலவே தோன்றவில்லை. 2009ல் இருந்து அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

நடிகர் சங்கத்திற்கு ரொம்பவே உறுதுணையாக இருந்தார். இடையில் அவருக்கு இருதய வலி ஏற்பட்டு கேட்டு அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இரண்டாவது நாளே படப்பிடிப்புக்கு வந்து ஆச்சரியம் அளித்தார்.

நடிகர் சங்கத்தில் கடைசியாக நடந்த இரண்டாவது பொதுக்குழுவில் எங்களுடன் சேர்ந்து நடிகர் சங்கத்தை சுத்தி சுத்தி பார்த்தார். அவரது படம் பிரச்சனையில் இருந்தது. அந்த படம் வெளிவர சட்டபூர்வமான உதவிகளை செய்வோம்.டி.பி கஜேந்திரன் எனது குடும்பத்திற்கு மிக நெருங்கிய நண்பர். அவர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவை நேரில் சந்தித்து பேசியபோது, அதுவரை யாரிடமும் பேசாமல் இருந்தவர் அப்போது தான் கலகலப்பாக பேசினார்.

அவரது படங்கள் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை கொடுத்தது இல்லை.
மயில்சாமி என்னிடம் தொடர்பு கொண்டு அடிக்கடி பல பிரபலங்களின் போன் நம்பர்களை கேட்பார். ஆனால் அது அவர்கள் மூலமாக யாருக்காவது உதவி செய்வதற்காகத்தான் இருக்கும்.

கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு அவர் செய்த உதவி மகத்தானது” என்று கூறினார்.

மேலும் பேசும்போது… ‘ நடிகர் விவேக் இறந்தபோது அவர்கள் ஞாபகார்த்தமாக அவர் வசித்த தெருவிற்கு சின்ன கலைவாண விவேக் தெரு என பெயர் வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

இரண்டே நாளில் அதற்கான உத்தரவை பிறப்பித்தார் தமிழக முதல்வர். அதேபோல இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பெயரிலும் ஒரு தெருவிற்கு பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதையும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வோம்” என்று கூறினார்.

Like Vivek, the name of director Balachander should also be named – Poochi Murugan

உத்தரவாதமில்லாத வாழ்க்கை.. அந்த பாடத்தை மூவரும் விட்டு சென்றுள்ளனர் – பொன்வண்ணன்

உத்தரவாதமில்லாத வாழ்க்கை.. அந்த பாடத்தை மூவரும் விட்டு சென்றுள்ளனர் – பொன்வண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பொன்வண்ணன் பேசும்போது…

“சிலரது மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்து இந்த மூவருடனும் இணைந்து பயணித்துள்ளேன்.

மூன்று பேருமே மூன்று வித குணங்களைக் கொண்டவர்கள். மயில்சாமி தனது மிமிக்ரி ஆடியோ கேசட்டை எடுத்துக்கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு வந்தபோது இருந்து அவரை தெரியும்.
மனோபாலவுடன் எனக்கு அடிக்கடி உரிமை சண்டை நடக்கும்.

ஆனால் அது அப்போதைக்கு தான். மறுநாளே அவர் வழக்கம் போல என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார். மயில்சாமி எல்லோருக்கும் ஒரு விதத்தில் உதவுவார் என்றால் மனோபாலா வேறு விதமாக உதவி செய்பவர்.

இசையமைப்பாளர் சிற்பியின் பாடல்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சென்று அவரை பிரபலமான இசையமைப்பாளராக மாற்றியதில் மனோபாலாவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

வாழ்க்கை எந்த உத்தரவாதமும் இல்லாதது. இதில் கோபம் பொறாமை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு இந்த வாழ்க்கையை நல்லபடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைத் தான் இவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள்” என்று கூறினார்.

Unguaranteed life.. All three have that lesson – Ponvannan

கடன் வாங்கி உதவி செய்வார் மயில்சாமி.; பொறுப்பை தானாகவே எடுத்துக்குவார் மனோபாலா.; கார்த்தி உருக்கம்

கடன் வாங்கி உதவி செய்வார் மயில்சாமி.; பொறுப்பை தானாகவே எடுத்துக்குவார் மனோபாலா.; கார்த்தி உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேசும்போது,

‘ மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி இந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் சிறுத்தை படத்தில் இணைந்து நடித்தேன்.

தனக்கு மிஞ்சி தான் தானம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்கிறான் என்றால் அது மயில்சாமி ஒருவராக தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார்.

யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார்.. இப்படி அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மனோபாலாவை பொருத்தவரை பல நிகழ்வுகளின் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார்.

ஏதாவது வாக்குவாதம் போன்றவை நிகழ்ந்ததாக தெரிய வந்தால் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பத்துடன் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.

கார்த்தி

Karthi emotional speech about Mayilsamy and Mano Bala

மனோபாலாவிடம் இருந்த புகைப்படங்களை வைத்தே கண்காட்சி நடத்தனும் – ரோகிணி

மனோபாலாவிடம் இருந்த புகைப்படங்களை வைத்தே கண்காட்சி நடத்தனும் – ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பேசும்போது…

“மனோபாலா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.. அவரிடம் எந்த விஷயம் குறித்து கேட்டாலும் அதற்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்து அது குறித்து பல விவரங்களை கூறுவார். அவரிடம் இருந்த புகைப்படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த வேண்டும். அது அவருக்கு பெருமை சேர்த்த மாதிரி இருக்கும்” என்று கூறினார்.

Rohini asks to hold an exhibition with the photographs of Manobala

More Articles
Follows