20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்த டாப் நடிகைகள்

20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்த டாப் நடிகைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர் கிரிஷ், இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி, ஷாம், சினேகா, மீனா, சங்கீதா இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ளார்.

சினேகா மற்றும் மீனாவுடன் இருக்கும் படம் ‘வாரிசு’ படத்தில் அவர்கள் இருப்பதற்கான ஊகங்களை எழுப்பியுள்ளது.

2003ஆம் ஆண்டு வெளியான ‘வசீகரா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார், 2001ஆம் ஆண்டு வெளியான ‘ஷாஜஹான்’ படத்தில் ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலுக்கு மீனா நடனமாடியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நடிகைகள் விஜய்யுடன் திரையில் மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Varisu

‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட கோவில் செட்

‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட கோவில் செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புராஜெக்ட் கே’ அறிவியல் புனை கதை மற்றும் காலப் பயணக் கூறுகளைக் கொண்ட ஒரு கற்பனைத் திரைப்படமாகும்.

பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் புறநகரில் உள்ள பழமையான கோவிலை போன்ற செட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தில் அமிதாப் பச்சன் சாகாவரம் பெற்றவராக உள்ளார். பிக் பியின் கதாபாத்திரத்துடன் அவரது கதாபாத்திரத்தின் ப்ரீ-லுக் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது, மேலும் படத்தில் பிரபாஸ் ஒரு சூப்பர் ஹீரோ என்பது தெளிவாகிறது.

போர்வைக்குள் முத்தமிடும் ‘பிக் பாஸ் 6’ போட்டியாளர்கள் . வைரலாகும் வீடியோ

போர்வைக்குள் முத்தமிடும் ‘பிக் பாஸ் 6’ போட்டியாளர்கள் . வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் தெலுங்கு’ சீசன் 6 செப்டம்பர் முதல் நடந்து வருகிறது, 21 போட்டியாளர்களில் 7 பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

மீதமுள்ள 14 பேருக்கு இடையே டைட்டிலுக்கான போட்டி உள்ளது.
இந்நிலையில், போட்டியாளர்களான மெரினா ஆபிரகாமும், ரோஹித் சாஹ்னியும் போர்வைக்குள் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற பிரபலங்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டாலும், இவர்கள் 2017 இல் திருமணம் செய்து கொண்டதால் இது இயற்கையானது. சீரியல்களில் பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த ஜோடி.

Bigg Boss 6 Telugu

தெரிந்ததை விட தெரியாதது அதிகம்.; புல்லரிக்கச் செய்த ரிஷப்.; ரஜினிகாந்தை கவர்ந்த ‘காந்தாரா’

தெரிந்ததை விட தெரியாதது அதிகம்.; புல்லரிக்கச் செய்த ரிஷப்.; ரஜினிகாந்தை கவர்ந்த ‘காந்தாரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

காந்தாரா

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம்.

காந்தாரா

இந்த நிலையில் ‘காந்தாரா’ படத்தினைக் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய ட்வீட்டரில்….

,“தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது.

என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும், இந்த படம் தமிழகத்தில் இன்றும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

காந்தாரா

Kantara highly happy with Rajinikanth appreciation

மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது…

படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம்.

உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார்.

லக்ஷ்மன் குமார்

ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும்.

ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார்.

ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி.

உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், சண்டை உதவி இயக்குநர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றார்.

லக்ஷ்மன் குமார்

கலை இயக்குநர் கதிர் பேசும்போது…

நல்ல படங்களை அடையாளம் கண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்களான உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. தண்ணீர் என்பது இன்றியமையாதது என்று எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றி விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இருக்கிறது.

கதை கேட்கும்போதே இந்த படம் வெற்றியடையும் என்பதை சில படங்களை ஊகிக்க முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையைக் கேட்கும்போதே வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனாலும், மற்ற படங்களைவிட இப்படத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இறுதி 10 நாட்களில் 24 மணி நேரமும் அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து முடித்தோம்.

ரக்ஷித் சிறப்பாக மேக்கப் போட்டிருந்தார். ஒவ்வொரு வேடத்திலும் அதற்கேற்றாற் போல் உடல்மொழியைக் கொண்டு வருவார். எத்தனை மணி நேரமாக இருந்தாலும் அத்தனை மணி நேரமும் அந்த கதாபாத்திரமாவே உடல் மொழியை மாற்றாமல் அப்படியே இருப்பார்” என்றார்.

கதிர்

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் பேசும்போது…

“3 வருடம் உழைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். இறுதி 6 மாதங்கள் இரவு பகல் பாராமல் உழைத்தோம்” என்றார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ்

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது…

“பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் வாயால் வடை சுடுவார் என்று கூறுவோம். ஆனால், மித்ரன் வாயால் பிரியாணி செய்வார். சண்டைக் காட்சிகளை கூறும்போது, உண்மையாகவே அடித்து விடுவாரா? என்ற பயம் வரும்.

ஆனால், கதை கூறுவதற்கும் அதை காட்சிப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கும். வாயால் கூறுவதை படமாக்குவது சவாலான விஷயம். ஆனால், மித்ரன் சொன்னதுபோலவே சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார்.

அதேபோல கதை கேட்கும்போது கார்த்தி சார் நிறைய கேள்விகள் கேட்பார். இப்படத்திலும் நிறைய கேள்விகள் கேட்டார். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதும் இப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

மேக்கப் மேன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு சர்தார் வேடத்தின் தொடர்ச்சி சரியாக உள்ளதா? என்று கேட்டார். இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதிலிருந்தே அவரின் ஈடுபாடு தெரிந்தது. அதன்பிறகு, எனக்கும் இப்படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூறி இப்படம் நன்றாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ரூபன்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்போது…

“ஒரே வருடத்தில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தோன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார்.

மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும் என்றார்.

ஜிவி பிரகாஷ்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது…

“இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும்.

இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையெய் பற்றி சொல்லுல் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார்.

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குனர் கதிர் சிறப்பாக செய்தார்.

கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் என்றார்.

 பி.எஸ்.மித்ரன்

நடிகர் கார்த்தி பேசும்போது,

தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.

இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.

கார்த்தி

ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.

கார்த்தி

எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்.

ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது என்றார். லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி” என்றார்.

கார்த்தி

Karthi and Mithran speech at Sardar Success meet

‘சர்தார் 2’.. ஹாட்ரிக் வெற்றி.; நடிகர் கார்த்தி செம ஹாஃப்பி

‘சர்தார் 2’.. ஹாட்ரிக் வெற்றி.; நடிகர் கார்த்தி செம ஹாஃப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது.

‘விருமன்’, ”பொன்னியின் செல்வன்’ மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன.

சர்தாரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, ‘சர்தார்’ பட வெற்றி விழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.

சர்தார்

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ‘விருமன்’ படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி.

அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி.

சர்தார்

கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, எட்டுத்திக்கும் ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் (சர்தார்) இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன், டைரக்டர் பி.எஸ்.மித்ரன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,
எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்தார்

Karthi has won hearts of the people following the Hat trick Hit.

Following the huge success of “Sardar”, Actor Karthi has happily announced that Second Part of the film will be made.!!

This year has been a Golden year for Tamil cinema’s leading Actor Karthi.’Viruman’, ‘Ponniyin Selvan’ and now Diwali release ‘Sardar’ has became a huge success.Actor Karthi has announced that Second Part will be made at the Success Meet.

Karthi appeared in a Rugged look as a village person in Viruman which released in August.Following that he played the important character Vandhiyathevan in Director Mani Ratnam’s ‘Ponniyin Selvan’.He stole hearts as a Spy.Now he has rocked in a dual role as Father and Son in ‘Sardar’.Actor Karthi is entertaining us by choosing different characters and different stories.He has marked his own place.

‘Sardar’ was the Talk of the Town during this diwali.Now Karthi has announced officially that second part of the film will be made.Fans are celebrating this news.

Producer S.Lakshman Kumar, Director P.S.Mithran, Red Giant Movies Senbagamoorthy, Music Director G.V.Prakash, Cinematographer George C.Williams, Editor Ruban, Art Director Kathir, Stunt Master Dilip Subburayan,Dialogue writer Pon Parthiban, Special Makeup Artist Pattanam Rashid participated at the grand success meet of ‘Sardar’.

More Articles
Follows