ரஜினி-விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன் ஆகியோரின் சாதனை

Rajinikanth Vijay Suriya Dhanush10 வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டரில் படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது? என்பதைதான் கணக்கில் வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தற்போதுதான் டிஜிட்டல் மயமாச்சே. அதற்கேற்ப சாதனைகளை நாமும் மாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா?

அந்த வகையில் தற்போது யூடியூபில் எந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.

நம் தமிழ் நடிகர்களின் படங்களில் முதல் 10 இடத்தை பிடித்த டீசர், ட்ரைலர் பற்றிய பட்டியல் இதோ…

கபாலி: ரஜினிகாந்தின் ‘கபாலி’ டிரைலர் 3. 3 கோடி ஹிட்ஸ்களுடன் 4. 65 லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது.

தெறி: விஜய்யின் ‘தெறி’ பட டிரைலர் 1. 06 கோடி ஹிட்ஸ்களுடன் 2. 42 லட்ச லைக்ஸ் பெற்றுள்ளது.

சிங்கம் 3: சூர்யாவின் ‘சிங்கம் 3′ டீசர் 9. 09 லட்சம் ஹிட்ஸ்களுடன் 1. 17 லைக்ஸ் பெற்றதுள்ளது.

இருமுகன்: விக்ரம் நடித்த ‘இருமுகன்’ டிரைலர் சுமார் 7. 7 லட்ச ஹிட்ஸ் மற்றும் 63,911 லைக்ஸ் பெற்றுள்ளது.

ரெமோ: சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ பட டிரைலர் 72 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 76,402 லைக்குகளை பெற்றுள்ளது.

காஷ்மோரா: கார்த்தி, நயன்தாரா நடித்த ‘காஷ்மோரா’ டிரைலர் 71 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 39,468 லைக்குகள் பெற்றுள்ளது.

கொடி: தனுஷின் ‘கொடி’ டிரைலர் 59 லட்ச ஹிட்ஸ்கள் மற்றும் 44,378 லைக்குகளை பெற்றுள்ளது.

24: சூர்யா நடிப்பில் வெளியான ’24’ டிரைலர் சுமார் 48 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.

இது நம்ம ஆளு: சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ பட டிரைலர் 26 லட்சம் ஹிட்ஸ்களை பெற்றுள்ளது.

போகன்: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ பட டிரைலரை தற்போது வரை சுமார் 22 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post