தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் தன் ரசிகர்களுக்காக மூன்று படங்களை கொடுத்தார் கமல்.
இவ்வருடம் விஸ்வரூபம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களை கொடுக்கவிருக்கிறார்.
இதில் விஸ்வரூபம் படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் மீதமுள்ளதால், விரைவில் அதை முடித்துவிடுவோம் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறாராம்.
இதனை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-60’ படத்தை அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் பின்னணி நெல்லை மாவட்டம் என்பதால் அங்கே சூட்டிங் நடத்தவிருந்தனர்.
தினமும் விஜய் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அதே போன்று செட் போட்டு நடத்தி வருகிறார்களாம்.
இதனையடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
பெரும்பாலும் இதன் படப்பிடிப்பை ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே நடத்த இருக்கிறார் இயக்குனர்.
திரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் இந்திய உளவாளியாக நடிக்கிறார் அஜித்.
நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ‘இறுதிச்சுற்று” ரித்திகா சிங் நடிக்கிறார்கள். ரித்திகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) அன்று திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.