தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அதில் மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Third single, Jujubee from Rajni’s Jailer will be out tomorrow