மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் தல தளபதியின் நாயகி

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் தல தளபதியின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The comeback of Thala Thalapathy heroine‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளார்.

நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்பொழுதுள்ள சினிமா தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

‘பாகுபலி’ போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது. பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும்.

சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு நடிகை ஸ்வாதி கூறினார்.

The comeback of Thala Thalapathy heroine

Breaking சிவகார்த்திகேயன்-அனிருத்-விக்னேஷ் சிவனை இணைக்கும் லைகா

Breaking சிவகார்த்திகேயன்-அனிருத்-விக்னேஷ் சிவனை இணைக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Anirudh Vignesh Shivans deadly combo with Lycaஇதுநாள் வரை வருடத்திற்கு ஒரு படத்தை மட்டுமே கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் அதிரடியாக நிறைய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

இவர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படம் என நடித்து வருகிறார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.

இதனையடுத்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan Anirudh Vignesh Shivans deadly combo with Lyca

போன் இல்ல அது பிசாசு; பொள்ளாச்சி சம்பவத்தை படமாக்கிய ராகுல்

போன் இல்ல அது பிசாசு; பொள்ளாச்சி சம்பவத்தை படமாக்கிய ராகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rahul directed movie based on Pollachi sexual caseM பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.
மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான்.

இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல்.

இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள்.

இப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே.

ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது… சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி , காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண்.

அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது.

நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க…இல்லவே இல்லை
“பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க”

படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல்..

இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல்.

ஒளிப்பதிவு – மனோகர்
இசை – கணேஷ் ராகவேந்திரா
பாடல்கள் – சொற்கோ
கலை – மனோ
எடிட்டிங் – மாருதி
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு மேற்பார்வை – D.P.வெங்கடேசன்
கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.
இணை தயாரிப்பு – JSK கோபி.

Rahul directed movie based on Pollachi sexual case

ஐரா எனக்கு பெயர் சொல்லும் படமா இருக்கும் – நடிகர் கலையரசன்

ஐரா எனக்கு பெயர் சொல்லும் படமா இருக்கும் – நடிகர் கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (11)கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்த படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது என்றார் நடிகர் கலையரசன்.

நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சர்ஜூம் கேஎம்.

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சர்ஜுன், தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி என்றார் இசையமைப்பாளர் கேஎஸ் சுந்தரமூர்த்தி.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படக்குழுவினர்

சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

“எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஜொலிக்க முடியும் என அவர் நம்புகிறார். ‘கனா’ ஒரு தீவிரமான எமோஷன் சார்ந்த திரைப்படம் என்றால், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஒரு முழுமையான நகைச்சுவை பொழுதுபோக்கு படம். படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து வருகிறோம்” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.

இந்த படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ், ஷிரின் காஞ்ச்வாலா, புட் சட்னி ராஜ்மோகன், ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷபீர் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். எஸ். கமலநாதன் கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

பேட்ட மாளவிகா இவ்வளவு ஹாட்டா..; இணையத்தை சூடேற்றும் படங்கள்

பேட்ட மாளவிகா இவ்வளவு ஹாட்டா..; இணையத்தை சூடேற்றும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் பேட்ட.

இதில் மாலிக் கேரக்டரில் நடித்த சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மலையாள நடிகை மாளவிகா மோகன்.

இவர் ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குனர் மஜித் இயக்கிய “பியாண்ட் த கிளவுட்ஸ்” படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் .

இந்நிலையில் நேற்று நடந்த ஜீ சீனி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார் .

அந்தப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More Articles
Follows