தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் ஏப்ரல் 17 அதிகாலை 4.45 மணியளவில் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.
அப்போது நடிகர்கள் நேரிலும் சிலர் ட்விட்டரிலிம் இரங்கல் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 பட படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி ஊர்வலத்திற்கு அவரால் வரமுடியவில்லை.
இந்த நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை சாலிக்கிராமத்தில் நேரில் சந்தித்துள்ளார்.
அவர்களிடம் துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மது தெரிவித்துள்ளார்.
Thalapathy Vijay paid a condolence visit to late actor Vivek’s home.