வரி கட்டியாச்சு.. ரியலிலும் ஹீரோதான் விஜய்.. ஆதாரங்களை அடுக்கும் ரசிகர்கள்.; BEAST டைரக்டருக்கு REQUEST

வரி கட்டியாச்சு.. ரியலிலும் ஹீரோதான் விஜய்.. ஆதாரங்களை அடுக்கும் ரசிகர்கள்.; BEAST டைரக்டருக்கு REQUEST

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது ரோல் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவருகின்றன.

அதாவது நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தான் தற்போது வரி விலக்கு கேட்கிறார்.

அது தொடர்பான வரி கட்டிய ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காருக்கான ஆயுட்கால வரியை கட்டிய பிறகே வரியை குறைக்க விஜய் கேட்டுள்ளார் என்கின்றனர்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

எனவே ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் விஜய் வருவது போல காட்சியை வைக்க வேண்டும் என நெல்சனுக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Thalapathy Vijay fans support on Rolls Royce issue

Vijay-Ghost_2-1

லிங்குசாமியின் ‘RAP019’ சூட்டிங் ஸ்பாட் தளத்தில் ஷங்கர் திடீர் விசிட்

லிங்குசாமியின் ‘RAP019’ சூட்டிங் ஸ்பாட் தளத்தில் ஷங்கர் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி நடிக்கும் #RAPO19 படப்பிடிப்பிற்க்கு திடீர் விசிட் அடித்தார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வருகை புரிந்தார்.

இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார்.

மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

அரசு அறிவித்துள்ள கோவிட் சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விரைவில் திரைக்கு கொண்டுவரும் நோக்கத்தில், முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தின் படப்பிடிப்பு, வெகு தீவிரமான வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

Director Shankar’s surprise visit to Rapo19 shooting spot

நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் கொரோனா நிதியளித்த எர்ணாவூர் நாராயணன்

நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் கொரோனா நிதியளித்த எர்ணாவூர் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றது.

எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

நாடார் பேரவை, நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.

எம் ஜி ஆர் , ஜெயலலிதா நினைவிடங்கள் போல் காமராஜர் நினைவிடமும் புதுப்பொலிவு பெற வேண்டும்” என்றார் எர்ணாவூர் நாராயணன்.

Ernavur Narayanan donated Rs 1 crore to CM corona relief fund

கிரிக்கெட்டர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது..; ஹீரோ இவரா?

கிரிக்கெட்டர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது..; ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sourav gangulyபிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.

மகாத்மா காந்தி முதல் ஜெயலலிதா வரை வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகியுள்ளது.

அரசியல் தலைவர்களை போல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரின்
வாழ்க்கையும் சினிமாவாகி பெரும் வெற்றி பெற்றன.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்றது.

தற்போது ஜீவா நடிப்பில் ’83’ என்ற பெயரில் இது உருவாகி விரைவில் வெளியாகவுள்ளது.

இதுபோல் டாப்ஸி நடிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் சினிமாவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது.

சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.

சவுரவ் கங்குலி கேரக்டரில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Star Actor in talks for Sourav Ganguly Biopic?

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சர் சாமிநாதன் பதில் இதோ…

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சர் சாமிநாதன் பதில் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கிண்டி பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஆய்வு மேற்கொண்டார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தான் காந்தி மண்டபத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தற்போது கொரோனா வைரஸ் 3வது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனைக்கு பிறகே தீர்க்கமான முடிவெடுக்க முடியும்” எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

When Will theatres reopen in Tamil Nadu ?

ஸ்டாலின் சிறப்பா பண்றாரு.. ஆட்சி ரொம்ப நல்லாயிருக்கு..- விஜய்சேதுபதி

ஸ்டாலின் சிறப்பா பண்றாரு.. ஆட்சி ரொம்ப நல்லாயிருக்கு..- விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்தாண்டில் இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ மற்றும் ‘உப்பென்னா’ ஆகியவை பெரிய வெற்றியை பெற்றன.

இவரது நடிப்பில் ‘லாபம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய ஹிந்தி வெப் தொடரில் நடிக்கிறார்.

சினிமாவை தவிர்த்து சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.

தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

சன் டிவி-யில் தொகுத்து வழங்கவிருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் ப்ரொமோஷனல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.

அதில் பேசிய விஜய்சேதுபதி…

‘மாஸ்டர் செஃப்’ ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு…

” காரணம் எதுவுமே இல்ல. அந்த புரோம்கிராம் குழுவினர் வந்து பேசினார்கள் எனக்கு பிடித்திருந்தது.

விக்னேஷ் சிவன் தான் அவர்களை அனுப்பி வைத்திருந்தார். எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஓகே பண்ணிட்டேன்.

எனக்கு பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் செய்யவே மாட்டேன். ” என்றார்

திமுகவின் 2 மாத ஆட்சி குறித்து கேட்டதற்கு…

ஸ்டாலின் சிறப்பா ஆட்சி பண்றாரு. நான் என்னருகே இருப்பவர்களிடம் கேட்டேன். அவர்களும் ஆட்சி நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

ஸ்டாலினை சந்தித்து பேசிய போது அவரிடமும் ஆட்சி குறித்து சொன்னேன்” என ஊடக பேட்டியில் தெரிவித்தார்.

மாஸ்டர் செஃப் தமிழ் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி சன் டிவியில் தொடங்க இருக்கிறது.

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இது ஒளிபரப்பாக இருக்கிறது. மொத்தம் 14 வாரங்கள் நடைபெறும் என்றும் 15வது வாரம் கிராண்ட் ஃபினாலே நடைபெறும்

Vijay Sethupathi praises CM Stalin

More Articles
Follows