தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஜீன் 22-ந்தேதி நடிகர் விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி கடந்த 100 நாட்களாகவே ட்விட்டரில் அவரின் பிறந்தநாள் ஹேஷ் டேக்குகளை டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
மேலும் அவரின் பிறந்தநாள் அன்று பல உதவி திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவையில்லாமல் நிறைய தியேட்டர்களில் விஜய்யின் ஹிட்டான படங்கள் திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை ரசிகர்கள் விதவிதமான போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில் சில போஸ்டர்களில்… “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே… தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு… என்ற வாசகங்கள் கொண்ட பல போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Thalapathy Vijay fans started celebration for their heros birth day