தமிழ் புத்தாண்டில் தளபதி ரசிகர்களுக்கு விஜய் 62 விருந்து

Thalapathy 62 first look release on Tamil New yearசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் 62 படம் உருவாகி வருகிறது.

துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரு படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஆர். முருகதாஸ் மற்றும் விஜய் இதில் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், தளபதி ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Thalapathy 62 first look release on Tamil New year

Overall Rating : Not available

Latest Post