ரசிகரின் காதல் கடிதத்தால் ஆடிப்போன ஆடுகளம் டாப்சி

ரசிகரின் காதல் கடிதத்தால் ஆடிப்போன ஆடுகளம் டாப்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Taapseeதனுஷுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் டாப்சி.

இதனையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தனக்கு வந்த காதல் கடிதங்களிலேயே ஒரு கடிதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக டாப்சி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

“பல ரசிகர்களிடமிருந்து காதல் கடிதங்கள் வருகின்றன.

ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொருவரின் ஆழமான அன்பை காண்கிறேன்.

அதில் ஒரு ரசிகர் “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவனாக வாழ்கிறேன்.

உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தயாராக இருக்கிறேன்.

என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே அன்பே. என் மனது முழுவதும் நீதான் இருக்கிறாய்” என்று எழுதியிருந்தார்.

அந்த கடிதம் என்னை கவர்ந்த ஒன்று” என டாப்சி தெரிவித்துள்ளார்.

27 நாட்களை நெருங்கியது சினிமா ஸ்டிரைக்; தீர்வுதான் என்ன..?

27 நாட்களை நெருங்கியது சினிமா ஸ்டிரைக்; தீர்வுதான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn theatresதியேட்டர்களில் புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் போராட்டம் செய்து வருகின்றனர்.

பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் எல்லா தியேட்டர்களிலும் ஆன்லைட் டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும், ‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கி இன்றோடு 27 நாட்கள் ஆகிவிட்டது.

மேலும் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.

இதனால் சினிமா துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்..

ஒரு சில நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கியிருந்தாலும் சிலர் வெளிநாடுகளுக்கு பறந்து விட்டனர்.

சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர்.

டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.

அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

விஜய் ரசிகர்கள் அதிமுக.வுக்கு ஆதரவு தர வேண்டும் : அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் அதிமுக.வுக்கு ஆதரவு தர வேண்டும் : அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Thangamani request they need Vijay fans supportநாமக்கல் மாவட்டத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழக அமைச்சர் தங்கமணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதுபோல் தற்போது தங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தங்களிடம் ஆதரவு கேட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.

TN Minister Thangamani request they need Vijay fans support

IPL தொடரில் டான்ஸ் ஆட ரன்வீர் சிங்குக்கு கோடிக்கணக்கில் சம்பளம்

IPL தொடரில் டான்ஸ் ஆட ரன்வீர் சிங்குக்கு கோடிக்கணக்கில் சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranveer Singh demand Rs 5 crores to dance in IPL series11வது ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மும்பையில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்குக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் சரிசமமான அளவில் அதிகம் என்பதால் அவரை வைத்தே தொடக்க நிகழ்ச்சி நடத்துவதென ஐ.பி.எல். நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அவரை அணுகிய போது 15 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 5 கோடி கேட்டதாகவும், இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் அண்மையில் வெளியான தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Ranveer Singh demand Rs 5 crores to dance in IPL series

காலா ஸ்டைலுக்கு மாறிய ரஜினி ரசிகர் சிம்பு; டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

காலா ஸ்டைலுக்கு மாறிய ரஜினி ரசிகர் சிம்பு; டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbus new look in Kaala style goes viralநடிகர் ரஜினிகாந்த் தன் தலைவர். நான் அவரின் தீவிர ரசிகர் என்ற ஓபனாகவே பல முறை சொன்னவர் நடிகர் சிம்பு.

இவரை பற்றிய செய்திகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இவர் அண்மைகாலமாக ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வருகிறார்.

அப்போது அவர் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் கறுப்பு கலர் சட்டை, கறுப்பு லுங்கி உள்ளிட்ட கெட்டப்பில் வந்துள்ளார்.

இதனால் சிம்பு மற்றும் ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே அந்த படங்களை பகிர்ந்து இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

STR aka Simbus new look in Kaala style goes viral

kaala simbu style

இயேசு உயிர்த்தெழவில்லை என பேசிய இளையராஜா மீது புகார்

இயேசு உயிர்த்தெழவில்லை என பேசிய இளையராஜா மீது புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja says no proof for Jesus resurrection sparks controversyஅமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்ற இசைஞானி இளையராஜா, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியுள்ளார்.

அவர் பேசும்போது…

“உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது.

இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை.

பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில் இது நடைபெற்றது” என பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் இந்தப் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ilayaraja says no proof for Jesus resurrection sparks controversy

More Articles
Follows