தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன் ரிசல்ட்..: புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் யார்.?

தமிழ் சினிமா PROக்கள் எலெக்சன் ரிசல்ட்..: புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்கள்.

தமிழ் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு நேற்று ஆகஸ்ட் 19ல் தேர்தல் நடைபெற்றது.

இந்த சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

பிஆர்ஓ சங்க முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் செயலாளர் ஜான் தலைமையில் ஒரு அணியும் தற்போது களத்தில் இருந்தனர். இவர்கள் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.

டைமண்ட் பாபு அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு யுவராஜ் போட்டியிட்டார். பொருளாளர் பதவிக்கு ஆனந்த் போட்டியிட்டார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு வி.கே.சுந்தரும், ராஜ்குமாரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு முத்துராமலிங்கமும், கணேஷூம் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, ‘திரைநீதி’ செல்வம், ‘மதிஒளி’ குமார், இனியன் ராஜன், சரவணன், புவன், செய்யது இப்ராஹிம், தர்மதுரை ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜான் தலைமையிலான அணியில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

செயலாளர் பதவிக்கு விஜயமுரளியும் பொருளாளர் பதவிக்கு குமரேசனும் போட்டியிட்டனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு மதுரை செல்வம், கோவிந்தராஜ் இருவரும் போட்டியிட்டனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு இருவரும் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, கடையம் ராஜூ, ‘கிளாமர்’ சத்யா, வெங்கட், சாவித்திரி, வி.எம்.ஆறுமுகம், நித்திஷ் ஸ்ரீராம், பிரியா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் இதோ….

பிஆர்ஓ யூனியன் தேர்தல்: டைமண்ட் பாபு தலைவர், யுவராஜ் செயலாளர்!

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் தேர்தலில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையிலான அணி பெரும்பாலான பதவிகளைப் பிடித்தது.

பிரசாத் லேபில் இன்று நடந்த தேர்தலின் முடிவுகள்:

தலைவர்: டைமண்ட் பாபு

துணைத் தலைவர்: வீ கே சுந்தர்

துணைத் தலைவர்: கோவிந்தராஜ்

செயலாளர்: யுவராஜ்

இணைச் செயலாளர்கள்: கணேஷ்குமார், முத்துராமலிங்கம்

பொருளாளர்: இரா குமரேசன்

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட எம்பி ஆனந்த், இரா குமரேசன் இருவரும் சமமாக வாக்குகள் பெற்றனர். எனவே குழுக்கள் முறையில் குமரேசன் தேர்வு செய்யப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்கள்:

ஆறுமுகம்
புவன்
தர்மா
இனியன்
கிளாமர் சத்யா
சாவித்ரி
ராஜேஷ்
வெங்கட்
திரைநீதி செல்வம்.

விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகிய மூவரும் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்..

Tamil Cinema Pro election result here

மாதவன் – தனுஷ் பட நடிகையை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

மாதவன் – தனுஷ் பட நடிகையை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ராஞ்சனா மற்றும் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுவரா பாஸ்கர்.

பல சர்ச்சையான கருத்துகளை சொல்லி பல சிக்கலில் சிக்குபவர் இவர்.

தற்போதும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்து சமூகவலைதள கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

சுவரா பாஸ்கரின் சமீபத்திய ட்விட்டரில்…

“ஆப்கானிஸ்தானில் நடப்பதுதான் இந்தியாவிலும் நடக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறி உள்ளது.

அதேபோல் இந்தியாவிலும் இந்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

மேலும் இந்துத்துவ தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ளும் நாம், தாலிபனில் நடக்கும் தீவிரவாதத்தைக் கண்டு கொதிக்கிறோம்.. அதிர்ச்சியடைகிறோம்.” என கூறியிருந்தார்.

இந்துத்துவா உடன் தீவிரவாதத்தை அவர் இணைத்துப் பேசியிருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

Arrest Swara Bhasker Trends on Twitter After Actress’s Latest Post on Taliban

லயோலாவில் லா..ல்லா..லலா…ல்லா..; மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி..; கை கொடுக்கும் சீனு ராமசாமி

லயோலாவில் லா..ல்லா..லலா…ல்லா..; மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி..; கை கொடுக்கும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“கொலசாமி” என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப்புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் சொல்லிமாளா கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தொடர் நிகழ்வை நம் கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.

தன் வாழ்க்கையின் உச்சநிலை துயரத்தை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனக்கு சோறுபோடும் விளைநிலத்தை தான் பெற்றெடுத்தப் பிள்ளையாகவேப் பேணிக்காக்கிறார் விவசாயி.

விவசாயிகளின் உண்மையானத் துயரத்தை உள்வாங்கியவர்களாய், வருடம் முழுவதும் வெட்டவெளி வெயில் காட்டில் வெந்து தணியும் விவசாயிகளை மதிப்போம்.

விவசாயிகளின் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்தைக் காப்போம் என்ற உள்ளார்ந்த வேண்டுகோளை உரத்தக் குரலில் ஒலிக்கிறது இந்த “கொலசாமி” பாடல்.

#லயோலா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த #கொலசாமி பாடல் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாடலாக அமையும்.

இதற்கு பாடல் எழுதி இயக்கிய மாணவர் எஸ்.அருள்துரை.
இசை:எம்.சுமன் மரிய அந்தோணி.
பாடகர்:யாழினி
எடிட்டிங்:B.சரவணன்
கிரியட்டிவ் சப்போர்ட்: நதியா
மீடியா சப்போர்ட்:மூவி பாண்ட் டிஜிட்டல்
Pro: ஜான்சன்
தயாரிப்பு:காஸ்மோஸ் மீடியா புரொடக்‌ஷன்ஸ் .

இந்த பாடலை பிரபல சினிமா இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நாளை 20.8.2021 வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு அவரது டிவிட்டரில் வெளியிடுகிறார்.

Loyola students in Kolasaami song will be released by Seenu Ramasamy

ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவே ஜோடியானதை போல சூர்யா ரீல் மகளுக்கும் ஆசையாம்

ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவே ஜோடியானதை போல சூர்யா ரீல் மகளுக்கும் ஆசையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970-களில் ஓரிரு படங்களில் ரஜினிக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரோஸி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பின்னர் பருவ மங்கையான பின்னர் ‘எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியானார். இந்த ஜோடிக்கு இப்போதும் மவுசு உண்டு. ‘அண்ணாத்த’ படத்திலும் இவர்கள் இணைகின்றனர்.

ரஜினிக்கு மகளாக நடித்து பின்னர் மீனா ஜோடியானதை போல சூர்யாவுக்கு மகளாக நடித்தவர் அவருடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா ஜோடியின் மகளாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா ஷர்மா.

இவர் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி ரோபோவை பார்க்க வரும் சிறுமியாக வந்தார்.

தற்போது ஸ்ரேயா நன்றாக வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார்.

இவர் தனுஷ் ரசிகை என்று கூட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மற்றொரு பேட்டியில் ரஜினி மீனாவை போல நானும் சூர்யாவுடன் ஜோடி போட வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

Suriya’s reel daughter wants to pair with him

ஒரு நாள் முதல்வர் தான் ஆகமுடியல.. ஒரு நாள் கைதியா வாழ ஆசையா.? இதோ செம ஆஃபர்..

ஒரு நாள் முதல்வர் தான் ஆகமுடியல.. ஒரு நாள் கைதியா வாழ ஆசையா.? இதோ செம ஆஃபர்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘முதல்வன்’ படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருப்பார். அது சினிமாவில் நடைபெற்ற ஒன்று.

தற்போது ஒரு நாள் கைதியாக அதுவும் எந்த வழக்கிலும் சிக்காமல், கோர்ட் கேஸ் என செல்லாமல் சிறையில் கைதியாக கம்பி எண்ண ஆசை இருக்கா.?

இந்த விபரீத ஆசை உள்ளவர்களுக்காகவே கர்நாடக சிறைத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற ஜெயில் உள்ளது.

இந்த சிறையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.

‘கைதியின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற கருத்தை முன்வைத்து, 24 மணிநேரத்திற்கு ஒரு கைதியின் வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் விதமாக கர்நாடக சிறைத்துறையினர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

இப்போது இந்த முயற்சியை செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்காக சிறைத்துறையினர் காத்திருக்கின்றனர்.

ஒரு நாள் டாஸ்க் என்ன தெரியுமா..?

மற்ற கைதிகளை போலவே சீருடை அணிவது, கைதி எண்ணுடன் மற்ற கைதியுடன் சிறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மற்ற கைதிகளை போல அவர்களுடன் தரையில் தூங்க வேண்டும்.

கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவைச் சாப்பிடுவது மற்றும் கைதிகள் மேற்கொள்ளும் தோட்டக்கலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் செய்ய வேண்டும்.” என்கின்றனர்.

மேலும் கைதிகளின் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோடு, குற்றச் சம்பவங்களில் சிலர் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலே இதுபோன்ற ‘ஒரு நாள் கைதி’ திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அரசு ஒப்புதல் கிடைக்குமா? என்பதை பார்ப்போம்..

Pay Rs 500 live like a prisoner in Belagavis Hindalga Jail.

சூப்பர் ஹிட்டடித்த மோகன்லாலின் ‘ஒடியன்’ பட சாயலில் தமிழில் வரும் ‘கருவு’

சூப்பர் ஹிட்டடித்த மோகன்லாலின் ‘ஒடியன்’ பட சாயலில் தமிழில் வரும் ‘கருவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’.

இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன்..

தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஒடியனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒடியனைப் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் இந்த ‘கருவு’ படமும் சற்றும் குறைவில்லாத மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு உருவாகியுள்ளது.

டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தின் திகில் மற்றும் த்ரில் காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோஷன்.

பிரம்மிக்கும்படி எடிட்டிங் செய்திருக்கிறார் ஹாரி மோகன்தாஸ்

முற்றிலும் புதியவர்களால் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

*தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்*

ஒளிப்பதிவு ; டோனி ஜார்ஜ்
இசை ; ரோஷன்.
பாடல்கள் ; பிரசாந்த் J S
படத்தொகுப்பு ; ஹாரி மோகன்தாஸ்.
கலை இயக்குநர் ; ஶ்ரீஜித் ஶ்ரீதரன்
ஒப்பனை ; அனூப் சாபு
ஆடைவடிவமைப்பாளர் ; லாவண்யா.
முதன்மை இணைஇயக்குனர் ; சுக்ருத்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் ; வினோத் பரவூர்.
இரண்டாவது கேமராமேன் ; சரண்பெரும்பாவூர்.
ஸ்டில்ஸ் ; விஷ்ணு ரகு.
டிஸைன்ஸ் ; அருண்கை
மக்கள் தொடர்பாளர் A. ஜான்.

இந்த திரைப்பட நிறுவனம் அடுத்ததாக ‘பாம்பாடும் சோலை சம்பவங்கள்’ என்கிற மர்மம், கொலை பின்னணி கொண்ட திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது.

‘தி நைட்’ எனும் த்ரில்லர் படத்தை இயக்கி வரும் ரங்கா புவனேஷ்வர் இப்படத்தை தமிழில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranga Buvaneshwar mistery thriller titled Karuvu

More Articles
Follows