இப்படி இருந்தா ரஜினி எப்படி நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்

இப்படி இருந்தா ரஜினி எப்படி நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar talks about Rajini and AR Murugadoss ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் கடந்த ஜனவரி 9ல் ரிலீசானது.

கிட்டதட்ட ஒரு மாதம் ஆன நிலையில் நிறைய தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த லாபத்தை படம் தரவில்லை. நஷ்டத்தை நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ் திரையுலகமே சில நாட்களாக பரபரப்பாகியுள்ளது.

இதனையடுத்து விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்திடம் முறையிட அவர்கள் ரஜினி மற்றும் முருகதாஸிடம் முறையிட சொன்னதாக தெரிகிறது.

இதனால் சிலர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் மிகவும் சர்ச்சையானது.

இந்த நிலையில் தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.

அப்போது… “தர்பார் திரைப்படத்தால் தமிழகம் முழுவதும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லைகா விநியோகஸ்தர்களுக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை.

குறைந்தபட்ச உத்திரவாதத்தில் வாங்கியிலிருந்தால் சங்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம்.

ஆனால் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள்,

தர்பார் படம் ஒரிஜினர் படம் போல இல்லை. டப்பிங் படம் போலாகிவிட்டது

தங்களது கோரிக்கையை முருகதாஸிடம் கூறச் சென்ற விநியோகஸ்தர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

முருகதாஸிடம் மூத்த இயக்குநர் என்ற முறையில் கேட்கிறேன். உங்களுக்கான சங்கம் உள்ளது அப்படியிருக்கையில் காவல்துறையில் புகார் அளிக்கலாமா?

படத்தை நீங்கள் எடுத்தால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது யார்? விநியோகஸ்தர்கள் தான்.

இதற்கு முன் நீங்கள் இவ்வளவு சம்பளமா வாங்கினீர்கள்? உங்களை சந்திக்க மூகமுடி அணிந்து கூட்டமாக வந்தார்களா?

துப்பாக்கியோடு வந்தார்களா? கத்தியோடு வந்தார்களா? அவர்கள் மீது புகார் அளித்ததை மூத்த இயக்குநர் என்ற முறையில் மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்க சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களை திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்.

ஒரு வேளை தர்பார் படத்தை வாங்கிய குற்றத்திற்காக அவர்களுக்கான பரிசு கைது தான் என்றால் ‘வாங்கியது தர்பார் எண்ணுவது பார்(கம்பி) என்றால் ரஜினி படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர்களா? தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் என்ன ஆங்கில பட இயக்குனரா? வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டரா? முருகதாஸ் அவர்களே கரண்டில் இல்லாதவர்கள் கரண்டில்(மின்சாரத்தில்) கூட கைவைக்க சொல்வார்கள் பார்த்து இருங்கள். அடுத்தப் படத்தில் இவ்வளவு சம்பளம் வாங்க முடியுமா? ”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.

T Rajendar talks about Rajini and AR Murugadoss

‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாராவுடன் இணைந்த கௌதம் & யாஷிகா

‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாராவுடன் இணைந்த கௌதம் & யாஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik and Yashika in RJ Balajis Mookuthi Ammanநயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் மூக்குத்தி அம்மன்.

தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நயன்தாராவுடன் ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, மவுலி என பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் சிறப்பு வேடத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி, கவுதம் கார்த்தியுடன் தான் எடுத்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Gautham Karthik and Yashika in RJ Balajis Mookuthi Amman

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay arjun sampathநடிகர் விஜய்யின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த ‘பிகில்’ படம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து உள்ளது.
இதற்கு அவர்கள் வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர்.

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

எனவே நடிகர் விஜயின் சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

அதேபோல் சினிமா படங்கள் எடுக்கும்போது இந்து சமய விரோத கருத்துகளை திணித்தும், நாட்டுக்கு விரோதமான கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master shooting spotபிகில் பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம், ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் விஜய் வீட்டில் எந்த ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றவில்லை.

வாக்கு மூலங்கள் மட்டுமே பெறப்பட்டன.

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

இரண்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு அதிகாரிகளின் விசாரணையில் இருந்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் நெய்வேலிக்கு சென்றார் விஜய்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தபோது, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது யார்? உடனே அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கத்தில் அங்கு கூடிய பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabadadaariநடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கபடதாரி படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா

சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங்கள் குறிப்பிடதகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

Creative Entertainers & Distributors நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதவாது…

நடிகை சுமன் ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்தக்கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தோம் அவரும் இக்கதாப்பத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவரே, ஆனால் அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது கன்னட பதிப்பில் இந்தக்கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

சுமன் ரங்கநாதன் வெகு அற்புதமான நடிப்பால் இந்தகதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம். தமிழில் சில குறிப்பிடதகுந்த வெற்றிபடங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்குபெறும் பகுதியின் படப்பிடிப்பு முழுதாக முடிந்து விட்டது. சென்னையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்குபெற்ற பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஜான் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனஞ்செயன் தழுவிய திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2323 the beginningமூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த’ 2323 ‘படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,

“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது உருவாக்கி வருகிறேன்.

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன் . ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையைக் கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான் வில்லன்., மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப் படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான் .அவனை எப்படிக் கதாநாயகன் முறியடிக்கிறான் என்பதுதான் கதை.
இதில் ஹீரோயிசத்துடன் தமிழனின் வீரக் கலையான குத்து வரிசையைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறேன்.

நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.

இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்போது மெருகேற்றும் பணிகளில், தொழில்நுட்ப.ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா ,கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.

வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,” என்று கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணா.

More Articles
Follows