தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் படங்களில் வித்தியாசமான முயற்சிகளை சூர்யா மேற்கொள்ளும் போது எல்லாம் கமல்ஹாசனின் ஆலோசனை கேட்டு வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் தான் கமலின் நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.
அந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இது பற்றிய ஒரு முன்னோட்டத்தை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
இதனை கமலும் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதனை பார்த்த சூர்யா, கமல் சார். உங்கள் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஜீன் 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.
அந்த நிகழ்ச்சிகான விதிமுறைகள் இதோ…
இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் தங்க வேண்டும். போன், இணையம், கடிகாரம், நாளிதழ்கள் இப்படி எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த வீட்டில் இருக்காது.
வீட்டின் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். யார் நூறு நாள்கள் தங்கி இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் போட்டியின் கான்செப்ட்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி
சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணி
Suriya SivakumarVerified account @Suriya_offl
Suriya Sivakumar Retweeted Kamal Haasan
Wow!! So looking forward to the show sir..!!