சுனைனா நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளரே இசையமைப்பாளராக மாறினார்

சுனைனா நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளரே இசையமைப்பாளராக மாறினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரெஜினா’ படத் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் பேசியதாவது..

நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்த புதிய முயற்சியில் இறங்கலாம் என்று தோன்றியது.

எனக்கு என்னுடைய இசைத்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும், அதைவிட ஒரு நல்ல கதையும் வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் வந்ததால் இப்படம் உருவாகியது.

ஆனால், இசையை நான் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை.

ரெஜினா படத்தில் ‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன்.

அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர் இந்த படத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

முதலில் இந்த கதை வந்தவுடன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று பார்த்தபோது, அப்பாவியான முகமும் இருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடிய விதமாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு சுனைனா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்பாவித்தனம் அவர் முகத்தில் நிலைத்து இருக்கும்.

சுனைனாவுடன் இப்படத்தில் நிவாஸ் ஆதித்யன் வில்லனாக நடிக்கிறார். அனந்த் நாக் சுனைனாவின் கணவராக நடிக்கிறார். சண்டைப் பயிற்சி இயக்குனர் தீனாவும் நடிக்கிறார்.

இப்படம் பழிவாங்கும் திரில்லர் படமாக இருக்கும். சராசரியான குடும்பப் பெண் காணாமல் போன கணவனைத் தேடும் கதை தான் இப்படம். பணம் பலம், ஆள் பலம் இப்படி எந்த ஒரு உறுதுணையும் இல்லாமல் எப்படி சாதிக்கிறார் என்பது இப்படத்தின் கதை.

இப்படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். மற்றும் மியூசிக் திரில்லராகவும் இருக்கும். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் விறுவிறுப்பாக இருக்கும்

பொள்ளாச்சியில் ஆரம்பித்து கேரளாவின் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.

இயக்குநர் முதலில் என்னிடம் கூறும்போது பாடல்கள் தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். கதையோடு பயணிக்கும் வகையில் தான் பாடல்கள் இருக்கும். 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

தமிழில் வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி போன்றோர் பாடியிருக்கிறார்கள். மலையாளத்தில் ரம்யா நம்பீசன், பாடல்கள் யுகபாரதி எழுதியிருக்கிறார்.

மலையாளத்தில் ஹரிநாகேஷ் எழுதியிருக்கிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்கும்.

இயக்குநர் தொழில்நுட்பத்தில் திறமையானவர். அவர் கூறியதால் சுனைனாவை தேர்ந்தெடுத்தோம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். இவருடன் தீனா நடித்திருக்கிறார்.

கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத அழகான காதலை பதிவு செய்யும் விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.

இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடி-யில் வெளியிடுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும்.

இவ்வாறு ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் கூறினார்.

.பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர்.

பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார்.
pro: ஜான்சன்.

Sunainaa to headline female-centric movie “Regina”

அஜ்மல் துஷ்யந்த் ஜெய்வந்த் மூவர் இணையும் ‘தீர்க்கதரிசி’

அஜ்மல் துஷ்யந்த் ஜெய்வந்த் மூவர் இணையும் ‘தீர்க்கதரிசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் நடிகர் அஜ்மல்.

தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

“தீர்க்கதரிசி” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர்.

நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், “மத்திய சென்னை”, “காட்டு பய சார் இந்த காளி” படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணையும் “தீர்க்கதரிசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் இனிதே துவங்கியது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட்)
இயக்கம் – P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி
இசை – பாலசுப்ரமணியம் G
ஒளிப்பதிவு – ஜெ. லட்சுமண் குமார்
கலை – ப. ராஜூ
படத்தொகுப்பு – C.K. ரஞ்சித் குமார்
பாடல்கள் – விவேகா, விவேக்
சண்டைப்பயிற்சி – டான் அசோக்
தயாரிப்பு மேற்பார்வை – S. கிருஷ்ணமூர்த்தி
நிர்வாக தயாரிப்பு – ராமு.M
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – R.R. தீபன் ராஜ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Ajmal-Dushyanth-Jaiwanth starrer P.G. Mohan & L.R. Sundarapandi directorial Theerkadarishi

‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை அடுத்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா அதிரடி பாடல்

‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை அடுத்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா அதிரடி பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார்.

நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ‘வெப்’ படத்துக்காக

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்..
வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..
இரவு முடியும் வரை… நீ ஆடு.. ”

எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீடும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Andrea croons a song for tamil movie web

மாணவர்கள் அரசியலை பேசும் படம்.; கதிருக்கு வில்லனாகும் மகேந்திரன்

மாணவர்கள் அரசியலை பேசும் படம்.; கதிருக்கு வில்லனாகும் மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கி வரும் படம் இயல்வது கரவேல்.

இப்படத்தில் கதிர் நாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவலக்ஷ்மி நாயகியாக அறிமுகமாகிறார்.

மாஸ்டர் படத்தில் இளவயது (விஜய்சேதுபதி) வில்லனாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் தான் இந்த படத்தின் வில்லன் என தெரிய வந்துள்ளது.

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஹென்றி கூறியதாவது:

மாணவர்கள் அரசியலை அடிப்படையாக இப்படம் உருவாகிறதாம்.

கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். இதுவரை பார்க்காத மகேந்திரனை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

Mahendran plays antogonist against Kathir

‘பீஸ்ட்’ வைத்த வில்லங்கம்… எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்…; ஏஆர். ரஹ்மான் போல சிக்கிய நெல்சன்

‘பீஸ்ட்’ வைத்த வில்லங்கம்… எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்…; ஏஆர். ரஹ்மான் போல சிக்கிய நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

இந்த படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரைலரில் ஒரு ஷாப்பிங் மால் காம்ப்ளக்ஸை தீவிரவாதிகள் சிறைப்பிடிப்பதாக உள்ளது.

அங்குள்ளவர்களை ரா பிரிவை சார்ந்த விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தை கதை என தெரிய வந்துள்ளது.

இது யோகிபாபு நடித்த ‘கூர்கா’ படத்தின் கதை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

பான் இந்தியா படமாக THALAIVAR 169..; இந்தியர்களை கவர மாஸ் டைட்டில் வைக்கும் நெல்சன்

எனவே ‘பீஸ்ட்’ படத்தை ‘கூர்கா பார்ட் 2’ என நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் படமே வெளியாகாத நிலையில் படம் இப்படிதான் இருக்கும் என ஒரு முடிவில் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் ‘தலைவர் 169’ படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் நிலைமை தன் தலைவர் படத்திற்கும் வந்துவிடுமோ.? என ரஜினி ரசிகர்கள் உள்ளத்தில் பயம் தொற்றிக் கொண்டுள்ளது.

எனவே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நெல்சனுக்கு கோரிக்கைகளும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ENGLISH TITLE FOR THALAIVAR 169.? ரஜினியுடன் ஐஸ்வர்யாராய் சிவகார்த்திகேயன் வடிவேலு

உலகளவிலும் ரஜினிக்கு மார்கெட் உள்ளது. படத்தை நல்ல படியாக வித்தியாசமாக இயக்கினால் உங்களுக்கும் நல்ல மார்கெட் வேல்யூ கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் இதுவரை ஸ்டார்களை இயக்கி கொண்டீருந்தீர்கள். இனி சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறீர்கள். அதை கருத்தில் கொள்ளுங்கள் எனவும் எச்சரிக்கை வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெல்ஸ்… பத்திரமா பாத்துக்குங்க…

கூடுதல் தகவல்…

1995ஆம் ஆண்டில் ரஜினியின் ‘முத்து’ படத்திற்கு தான் முதன்முறையாக இசையமைத்தார் ஏஆர். ரஹ்மான். பட ரிலீசுக்கு 2 மாதங்களுக்கு முன் பாடல் கேசட்டுகள் வெளியானது. அப்போது இது ரஜினி பட பாடல்கள் போல இல்லை என ரஹ்மானை எச்சரித்தவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பின்னர் முத்து ரிலீசான பின் பாடல்கள் பட்டைய கிளப்பி ஜப்பான் வரை ஹிட்டானது என்பதெல்லாம் வேற மாரி.. வேற மாரி… ரஜினியிசம்.

Rajini fans warns Beast director Nelson

RRR 800 கோடி வசூல்.. மெகா ஹிட்… தங்க நாணயத்தை அள்ளி வழங்கிய ராம்சரண்

RRR 800 கோடி வசூல்.. மெகா ஹிட்… தங்க நாணயத்தை அள்ளி வழங்கிய ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 25ல் உலகமெங்கும் ரிலீசாகி வசூல் வேட்டையாடி வருகிறது ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம்.

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 800 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

மிகப்பிரம்மாண்டமாக உருவான இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உழைத்துள்ளனர்.

எனவே அவர்களது பணியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் உழைத்த டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் ஆகிய 35 நபர்களுக்கு தலா 11 கிராம் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் நடிகர் ராம்சரண்.

Quit OTT.. RRRun to theatRRRe..; ஆர்ஆர்ஆர் விமர்சனம் 4.25/5

உழைப்பாளிகளுடன் உணவருந்தி தங்க நாணயத்தை வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை ராம்சரண் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Charan surprised them all by gifting each of them a gold coin weighing 1 tola (11.6 gms). This gesture by Ram Charan has sure won the hearts.

Ram Charan gifts gold coins to 35 technicians from RRR unit

More Articles
Follows