நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

venkat prabhu motherஇசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

இவர் இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் தோன்றி இஇன்றைய தலைமுறையினரிடையே பிரபலமானவர்.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என திரையுலகில் பிலபலம்.

இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என பிரபலமானவர்.

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இவரது தம்பி பிரேம்ஜி நிச்சயமாக இருப்பார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மே 9 இரவில் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

இதோ அந்த அறிக்கை….

Overall Rating : Not available

Latest Post