கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் 3 மாதங்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடந்தனர்.
தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் சினிமா துறைக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.
தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. சூட்டிங்குகள் நடைபெறவில்லை. அதுபோல் மேடை நாடக கலைஞர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகை பிழைக்க வேண்டி தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறாராம்.
கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் இவர்.
சில ஆண்டுகளில் ஒரு ஆட்டோ வாங்கியுள்ளார் அதிலேயே நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவது தான் இவரது வாடிக்கை.
தற்போது கொரோனா ஊரடங்கால் நாடகம் கை விடவே இந்த ஆட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது.
முழுநேரமாக ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறாராம் மஞ்சு.