உதயநிதிக்கு நன்றி.; பிலிம்சேம்பர் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

உதயநிதிக்கு நன்றி.; பிலிம்சேம்பர் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பருக்கு தேர்தல் நடைபெற்றது.

தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத் தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி,
பொருளாளராக என்.இராமசாமி ( தேனாண்டாள் முரளி) செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல் அமீது உட்பட 44 செயற்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர்.தேர்தல் அதிகாரியான சி.கல்யாண் பணியாற்றினார்.

பிலிம்சேம்பர்

பில்டிங் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற உறுதுணையாக இருந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத், ஜாகுவார் தங்கம் உட்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

SIFCC
16.10.2022

பிலிம்சேம்பர்

Southindian Film Chamber of Commerce new executives

தீபாவளி கொண்டாட்டம் : உதவும் உள்ளங்களாக மாறிய கிருத்திகா வாணி தான்யா அஸ்வின்

தீபாவளி கொண்டாட்டம் : உதவும் உள்ளங்களாக மாறிய கிருத்திகா வாணி தான்யா அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

“ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் பிரலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ஆனந்த தீபாவளி

Kiruthiga Vani Tanya Ashwin celebrated Diwali with Childrens

சென்னையில் ‘துணிவு’ பட சூட்டிங்.; அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் அப்செட்

சென்னையில் ‘துணிவு’ பட சூட்டிங்.; அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை இயக்கிய வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க ் நாயகியாக மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அண்ணாசாலை போன்ற செட் ஒன்றை ஹைதராபாத்தில் அமைத்து படமாக்கி வந்தனர்.

இந்த படத்தை 2023 அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளதால் இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

இதன் இறுதி கட்டப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

அதற்காக அஜித் & மஞ்சு வாரியார் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று இருந்தனர். அங்கு படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் ‘துணிவு’ பட சூட்டிங்கை நடத்தியுள்ளார் இயக்குனர் வினோத்.

ஹைதராபாத்தில் காட்சிகள் எடுக்கப்பட்டதில் சில காட்சிகள் மிஸ் ஆகியுள்ளது. எனவே பேட்ச் ஒர்க் படப்பிடிப்பை இன்று அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டடம் அருகே நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அஜித்தை காண ரசிகர்கள் திரண்டனர். ஆனால் அங்கு அஜித் இல்லை. அவரை போன்ற டூப்ளிகேட் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர்.

அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் அதன் பின்னர் அப்செட் ஆகி திரும்பிச் சென்றனர்

Ajiths Thunivu Patch Work shooting at Chennai

#துணிவு l #Thunivu Patch Work shoot Going on at Mount Road, Chennai..?l #filmistreet
#Ajithkumar is not on the spot..
Displaying bg-850×465.jpg.

பிரித்திவிராஜ் பிறந்தநாளில் பிரபாஸ் பட குழுவினர் கொடுத்த ட்ரீட்

பிரித்திவிராஜ் பிறந்தநாளில் பிரபாஸ் பட குழுவினர் கொடுத்த ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியான பிருத்விராஜின் ‘சலார்’ வரதராஜ மன்னாரின் கேரக்டர் லுக்

முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, ‘சலார்’ படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று அக்டோபர் 16ல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக பட குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நட்சத்திர நடிரகான பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ‘சலார்’ படத்தைப் பற்றிய நேர் நிலையான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்’ என பட குழுவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் அற்புதமான நடிப்பை காண்பதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில்…

“பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், ‘சலார்’ படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது.

படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்” என்றார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பது, இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது.

‘பாகுபலி’ நட்சத்திரமும், ‘கே ஜி எஃப்’ தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவினரும், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் கூடிய எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் பணியாற்றுவதால் இணையவாசிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரசாந்த் நீல், ‘சலார்’ படத்தை இயக்குவதால் இந்த திரைப்படம், திரையுலக ரசிகர்களிடையே நம்பிக்கைக்குரிய படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பன்முக ஆளுமை திறன் கொண்ட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் அற்புதமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி’ மற்றும் ‘கே ஜி எஃப்’ ஆகிய இரண்டின் கலவையாக ‘சலார்’ உருவாகி வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் நட்சத்திரமான பிரபாஸ், ‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ், கே ஜி எஃப் இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து இந்திய ரசிகர்களுக்காக பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

JUST IN வாடகைத்தாய் சர்ச்சை: விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி – நயன்தாரா தம்பதி

JUST IN வாடகைத்தாய் சர்ச்சை: விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி – நயன்தாரா தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்தன.

எனவே நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி. விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்பித்துள்ளனர் விக்னேஷ் சிவன்–நயன்தாரா தம்பதி.

6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பித்துள்ளனர்.

Nayanthara – Vignesh Shivan couples submit Surrogacy documents

‘நந்திவர்மன்’ அப்டேட் : சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் விரைவில்..

‘நந்திவர்மன்’ அப்டேட் : சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் விரைவில்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தால் சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்தது தான்.

இந்த நிலையில், சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள்.

ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது.

அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் டீசர் பல விவாதங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது.

மேலும், ‘நந்திவர்மன்’ படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்திருப்பதோடு, திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ‘நந்திவர்மன்’ படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, சோழர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் மக்களை பல்லவர்கள் பற்றி பேச வைத்திருக்கிறது.

டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றிருப்பது பற்றி தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில்…

“’நந்திவர்மன்’ படத்தை சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக படமாக்கினோம். அதற்கு காரணம், படத்தை தரமாக எடுப்பதற்காக தான். தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது, டீசரை பார்த்தாலே தெரியும் படம் எவ்வளவு பிரம்மாண்டமாக வந்திருக்கும் என்று. இதனால் தான் ரசிகர்களிடம் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படமும் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும்.” என்றார்.

இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில்…

“நான் செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார். அதை கேட்கவே வியப்பாக இருந்தது. பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள் தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள். பிறகு தான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன்.

அதுமட்டும் அல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது, அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது.

வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும், அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தளமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் இதுவரை சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நந்திவர்மன்

ஐந்து நிமிடம் பல்லவர்களின் வரலாற்றை 2டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடி செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நடத்தினோம். அமானுஷ்ய விஷயங்கள் நடக்கும் அந்த இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அதற்கு பதிலாக செங்கல்பட்டு பகுதியில் அந்த காட்சிகளை படமாக்கினோம். இந்த படத்தை எடுக்கும் போது எங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதோடு, சில அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக, செங்கல்பட்டு பகுதியில் படப்பிடிப்புக்காக பெரிய பள்ளம் தோன்றினோம், அப்போது அதில் ஒரு கொடூரமான முகம் போன்ற வடிவமைப்புக் கொண்ட பாறை தெரிந்தது, அதை தொடர்ந்து அப்பகுதியில் போட்ட பிரம்மாண்ட செட் ஒன்று புயலில் சிக்கி சிதைந்து போனது, நல்ல வேலையாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதுமட்டுமா, படத்தின் ஹாட்டிஸ்க் கரெப்ட் ஆகிவிட்டது. இப்போது கூட டீசரை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட லேப்டாப் கரெப்ட் ஆகிவிட்டது. இப்படி பல சிக்கல்கள் எங்களை தொடர்வதே ஒரு அமானுஷ்யம் போலத்தான் இருக்கிறது.” என்றார்.

படத்தின் நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில்…

“காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையின் மற்றொரு முகத்தை காட்டினோம். அப்போது அனைவரும் என்னிடம் கேட்டது, போலீஸுக்கு எதிரான படத்தில் நடித்து விட்டீர்கள், போலீஸாக நடிப்பீர்களா? என்பது தான். நானும் பார்த்துக்கலாம் என்று சாதாரணமாக இருந்தேன்.

ஆனால், பெருமாள் வரதன் இந்த கதையை என்னிடம் சொல்ல வரும் போது, இது போலீஸ் வேடம் என்பது தெரியாது. பிறகு கதை முழுவதையும் அவர் என்னிடம் சொன்ன போது தான் போலீஸ் வேடம் என்பது தெரிந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு சீக்கிரம் நான் போலீஸ் வேடத்தில் நடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றி படங்களில் பெருமாள் வரதன் பணியாற்றியிருக்கிறார், என்பதால் அவரிடம் கதை கேட்க சென்றேன். பொதுவாக நடிகர்கள் ஒரு கதையை கேட்டால், இதில் நமக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது, என்று பார்ப்பார்கள், நானும் அப்படித்தன.

ஆனால், இந்த படத்தில் நான் நடிப்பதற்கு என்னை தாண்டி ஒரு காரணம் என்றால் அது இயக்குநர் பெருமாள் வரதன் மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் தான். அவர்களுடைய உழைப்பு மற்றும் படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.

இயக்குநர் பெருமாள் வரதன் எப்போதும் இந்த படத்தின் சிந்தனையாகவே இருப்பார், சில நாட்கள் தூக்கம் வரவில்லை என்று இரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார்.

படப்பிடிப்பு தொடங்க மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பெருமாள் வரதன் நள்ளிரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து எனக்கு போன் செய்தார். நான் தான் சார், மூன்று நாட்களில் படப்பிடிப்பு இருக்கு ஓய்வு எடுங்க, என்று கூறினேன்.

அந்த அளவுக்கு அவர் எப்போதும் இந்த கதையின் சிந்தனையாகவே பயணித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமாரும் இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, படமும் பெரிய அளவில் வரும் என்பதால் தான் சார் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தேன், என்றார். முதல் படமாக இருந்தாலும் பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிரார். இவர்கள் இரண்டு பேருக்காக தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும், அதுவும் முதல் படம் என்றால் அவர்கள் எப்படி உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், ஆனால் இவர்கள் உழைப்போடு சினிமா மீது ரொம்பவே பேஷனாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வம் என்னை வியக்க வைத்தது.

ஒரு புது டீம், இப்படி ஒரு படத்தை பண்ணுவது சாதாரண விஷயம் அல்ல, இருந்தாலும் இதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். இனி இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் பாராட்டும் வகையில் தான் படம் உள்ளது. நிச்சயம் ‘நந்திவர்மன்’ அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நிறைய வரலாற்று சரித்திர படங்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. நீங்களும் அந்த படத்தை பார்த்து தான் ‘நந்திவர்மன்’ படத்தை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பெருமாள் வரதன், “’பொன்னியின் செல்வன்’ படம் அல்ல, அப்படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த படத்தின் முழு திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன்.

சில மாதங்கள் தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தேன். அந்த காலக்கட்டத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. எனவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பாகவே என் படம் உருவாக வேண்டியது, தயாரிப்பாளர் கிடைக்காததால் கொஞ்சம் தாமதாமாகி விட்டது.

எனவே, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து இந்த படத்தை எடுக்கவில்லை. இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லப்படாத சம்பவங்கள் நிறைந்த படமாகவும், பல்லவர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள கூடிய தகவல்கள் அடங்கிய படமாகவும் ‘நந்திவர்மன்’ இருக்கும்” என்றார்.

நந்திவர்மன்

Nandivarman Tale and secrets of Pallava Dynasty laced with supernatural mystery

More Articles
Follows