சௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு

Soundarya Rajini gave Seed Balls As Return gift In her wedding reception நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌவுந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இவரின் மகன் வேத் என்பவர் இவருடன் வசித்து வருகிறார்.

தற்போது நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் என்பவரை 2வது திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களின் திருமணம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி நேற்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூல பைக்கு பதிலாக விதைப் பந்துக்களை ரஜினி குடும்பத்தார் பரிசளித்துள்ளனர்.

ஒருவர் எத்தனை விதைபந்துக்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காகித பேக்கில் அந்த விதைபந்து போடப்பட்டு அதன் மேல் அது என்ன விதை என்பதையும் குறிப்பிடப்பிட்டு இருந்தனர்.

இதை நாம் நட்டு வைக்கலாம். அல்லது தூக்கி எறிந்தால் போதும் அங்கு அது மரமாக முளைக்கும்.

ரஜினியின் இந்த முயற்சியை வித்தியாசமான பரிசை பலரும் பாராட்டினர்.

Soundarya Rajini gave Seed Balls As Return gift In her wedding reception

Overall Rating : Not available

Latest Post