40 படங்களை இயக்கிய மலையாள இயக்குநருடன் சௌந்தரராஜா & தேவானந்தா கூட்டணி

40 படங்களை இயக்கிய மலையாள இயக்குநருடன் சௌந்தரராஜா & தேவானந்தா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில்.

இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.

40-க்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவரது சமீபத்திய படம் ‘மையா’ ஹிந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குநர் அனில் இயக்கிய ‘பகல் பூரம்’ படத்தின் மூலம் தாமோர் சினிமா தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது.

இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை ‘வாழ்கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘தர்மதுரை’, ‘சுந்தரபாண்டியன்’ புகழ் சௌந்தரராஜா ‘சாயாவனம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது.

இதற்கு முன் ‘ஒரு கனவு போல’… காமெடி மன்னன்’ கவுண்டமணியுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

‘சாயாவனம்’ பற்றி பேசிய இயக்குநர் அனில், தனது தமிழ் திரையுலக என்ட்ரிக்கு வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவை என்று கருதியதாக கூறினார்.

“படத்தின் தலைப்பு ‘அடர்ந்த காடு’ என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது.

கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்ட சௌந்தரராஜா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ” என்றார் இயக்குநர் அனில்.

மேலும், படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை எல் ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார். படத்திற்கு எடிட்டிங்கை அருள் சித்தார்த் மேற்கொள்கிறார்.

Soundararaja & Devananda team up with Malayalam director

‘செஞ்சி கோட்டை’-யில் நாயகனாக களமிறங்கும் ஆதேஷ் பாலா

‘செஞ்சி கோட்டை’-யில் நாயகனாக களமிறங்கும் ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் இயக்குனர் சந்தோஷ் நவீனின் இயக்கத்தில் பேட்டை, முண்டாசு பட்டி, ஆறு போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆதேஷ் பாலா முதல் முதலாக கதாநாயகனாக களமிறங்குகிறார்.

இப்படத்தில் இரட்டை நாயகிகளாக அறிமுகமாகின்றனர் சொஹாணி விருபாக்‌ஷா மற்றும் நடிகை பிரியங்கா.

இப்படத்திற்கு செஞ்சி கோட்டை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காதல், பாசம், போராட்டம் என பல அம்சங்களை தழுவிய குடும்ப படம், பார்த்தால் பசு பாய்ந்தால் புலி கதாபாத்திர வேடம் ஏற்று அன்பை பொழிபவராகவும், அதே நேரத்தில் ஆக்ரோஷமும் ஆதங்கமும் வெளிப்படுத்தும் மனிதராகவும் ஆதேஷ் பாலா சிறப்பாக நடித்துள்ளார்.

கில்லி புகழ் அரிவாள் வீச்சு வில்லன் கராத்தே ராஜாவும் அதேஷ் பாலாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், பாசமிக்க தந்தையாக அறம் திரைப்பட புகழ் மகிமை ராஜும், வில்லியாக கவிதா விருபாக்‌ஷாவும், அறிமுக வில்லனாக ஷியாம் ஜீவாவும் நடித்துள்ளார்கள்.

இதில் வில்லி கவிதா விருபாக்‌ஷாவும் நாயகி சொஹாணி விருபாக்‌ஷாவும், நிஜ வாழ்க்கையில் தாயும் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிற அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர் சந்தோஷ் நவின்..

நிச்சயமாக இந்த படம் எந்தவொரு ஆபாசமின்றி குடும்பத்துடன் சென்று பார்க்கும்படி யதார்த்தமான நிகழ்வுகளை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது என்கிறார் இயக்குனர். செஞ்சி கோட்டை திரைப்படத்தில் நடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்பையும் அள்ளித்தரும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வெளிப்புற படக்காட்சிகள் செஞ்சியை அடுத்துள்ள பழைய சுரத்தூர் கிராமத்து மலைகளிலும், திருவண்ணாமலையில் நந்தி தீர்த்தம் மலை அடிவாரத்திலும் இதுவரை கண்டிராத கோணங்களில் கேமிரா கண்ணுக்கு விருந்து படைத்துள்ளது.

சண்டைக்காட்சிகள் நிச்சயம் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது. படத்தில் 3 பாடல்கள் உள்ளது. இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயகனும் ஊர் பஞ்சாயத்து தலைவரும் மோதிக் கொள்ளும் காட்சியில் ஊர் மக்களும் மிக இயல்பாக நடித்து ஒரே டேக்கில் ஒகே ஆன காட்சி நிச்சயம் மக்களின் பாராட்டை பெறும் என்கிறது படக்குழு.

செஞ்சி கோட்டை திரைப்படத்தில் மைனா வெற்றி திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் கும்பிடுகுரு சாமியின் தீபாவளி வாழ்த்துக்கள் வெங்கைய்யா பாலனும் நட்புக்காக இணைந்துள்ளார்.

மேலும் மாஸ்டர் படத்தில் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனாக நடித்த ஆஜய்யும் மற்றும் அறிமுக நடிகைகள், பவுனம்பாள், ஸ்ரீஜோதி,மீனா ஜெயந்தாரா, நடிகர்கள் எஸ்.ரமேஷ் மற்றும் கேசவ் நடித்துள்ளார்கள்.. திரையுலகில் செஞ்சி கோட்டை நிச்சயம் தனது தனித்துவ முத்திரையை பதிக்கும்.

Adesh Bala to play the lead role in ‘Senji Kottai’

‘வின்னர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்த ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

‘வின்னர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்த ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் கொடி கட்டிப் பறந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.

முன்னணி நடிகைகள் இவருடன் ஜோடியாக நடிக்க காத்திருந்தனர்.

ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரசாந்த்துடன் நடித்திருந்தார்.

தமிழ், வின்னர், சாக்லேட், விரும்புகிறேன் உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்திருக்கிறார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் பிரசாந்துடன் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சூப்பர் ஹிட்டான வின்னர் திரைப்படத்தை பிரசாந்த் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது பிரசாந்த் கூறுகையில், “அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி காட்சிகள் படுபிரபலம்.

‘Top Star’ Prashanth gave an update on ‘Winner 2’

லாட்டரி கதையை கையிலெடுக்கும் ‘பம்பர்’ டீம்..; துப்பாக்கி பாண்டியனாக ஜி.பி.முத்து

லாட்டரி கதையை கையிலெடுக்கும் ‘பம்பர்’ டீம்..; துப்பாக்கி பாண்டியனாக ஜி.பி.முத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குநர் தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார்.

அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.

‘பம்பர்’ படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார்…

“கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

Vetri-Shivani starrer ‘Bumper’ in final post-production stage, to release soon

என்ன கொடுமை சார்.!? விஷால் தரப்பிலே வெளியான செய்திக்கு விஷால் மறுப்பு

என்ன கொடுமை சார்.!? விஷால் தரப்பிலே வெளியான செய்திக்கு விஷால் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் விஷால் தரப்பில் ஒரு செய்தி வெளியானது. அதை நம் FILMISTREET தளத்தில் பதிவிட்டு இருந்தோம். அந்த செய்திக்கு தற்போது விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த செய்தி வதந்தி. நான் அரசியலில் ஈடுபட போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

எங்கிருந்து இந்த செய்தி வெளியானது என்பதை அறியவில்லை. மேலும் நான் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவில்லை. ஆந்திர அரசியலில் ஈடுபட போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் தரப்பில் வெளியான ஒரு செய்திக்கு தற்போது விஷாலே மறுப்பு தெரிவித்திருப்பது கோலிவுட்டையும் அவர் ரசிகர்களையும் மக்களையும் அதிர்ச்சி உள்ளாகியது.

இனிமேலாவது விஷால் தன் தரப்பு செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை தீர விசாரித்தால் நல்லது.

அந்த பழைய செய்தி இதுதான்..

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதையை முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது.

இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜெகன் மோகனின் வியூகம்..

கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார்.

கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வரும் சூழ்நிலையில் அதிலும் குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏன் நடிகர் விஷாலை தேர்வு செய்கிறார் ஜெகன் மோகன் ?

சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர்.

இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த பொது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலை அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைக்க காரணம் என்ன ?

ஏற்கனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார் நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்திவந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது, பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலிற்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Vishal denies the news released on his behalf

உடல்நிலை காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் நாசர்.? கமீலா விளக்கம்

உடல்நிலை காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் நாசர்.? கமீலா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகன்களை தாண்டியும் பல நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளனர்.

அதில் மிக முக்கியமானவர் நடிகர் நாசர்.

இவர் தற்போது நடிகர் சங்க தலைவராக இருக்கிறார்.

பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரும் ஒரு கட்டத்தில் படங்களை தயாரித்தும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

வில்லனாக நடித்தாலும் ஹீரோக்களை தாண்டியும் பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது.

எனவே நாசருக்கு தன் படங்களில் வலுவான கேரக்டரை அமைத்துக் கொடுப்பது கமல்ஹாசனின் வழக்கம்.

மகளிர் மட்டும் (1990களில்) படத்தில் நாசரை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் கமல்ஹாசன்.

மேலும் அவ்வை சண்முகி குருதிப்புனல் விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நாசருக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்து வந்தார் கமல்ஹாசன்.

ரஜினியுடன் வேலைக்காரன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நாசர்.

இந்த நிலையில் நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சில நபர்களால் பரப்பப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் நாசரின் மனைவி கமீலா தன் ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவை உண்டு சினிமாவையே சுவாசித்திருப்பது தான் நாசர்.

அவரைப் பற்றி வரும் தகவல்கள் தவறானவை. சில நபர்கள் தேவையில்லாமல் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது நாசரின் மகன்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சைவம் & சார்லின் சாப்ளின் 2 படத்தில் நடிகர் நாசரின் ஒரு மகன் நடித்திருந்தார்.

அதுபோல கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் மற்றொரு மகனும் நடித்திருந்தார்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் –
நடிகர் நாசர்

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாகவே நாசர், பெரிய படங்களில் மட்டுமல்லாது முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், என்று இல்லாமல் அறிமுக நாயகர்கள், அறிமுக கலைஞர்கள் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து கொண்டே இருப்பவர். சின்ன கலைஞர்கள் என்று பார பட்சம் பார்க்காமல் யார் கேட்டாலும் அது சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை ஏற்று நடித்து கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதிலும் அனேக மொழிகளில் நடித்து வரும் நாசரை பற்றி இப்படி ஒரு செய்தி வருவது உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்

நாசர் அவர்கள் கூறியிருப்பதாவது :

நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது. எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்.

News about Nasser’s health, quitting career (acting), etc..etc.. who ever started this, long live, to spin more stories..on more people.. Nasser eats and breathes cinema.. thanks friends and folks for all the concern. DONT SPREAD FALSE NEWS.

Nasser quits cine industry ? Kameela explains

More Articles
Follows