தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
’சித்தி’, ‘வாணி ராணி’, ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ்.
இவர் தமிழ், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போதும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ராவின் அம்மாவாக நடித்து வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்,.
இந்த நிலையில், சாந்தி வில்லியம்ஸின் ஒரே மகன் சந்தோஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
திருமணமான சந்தோஷுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
நேற்று தனது அறையில் படுத்து தூங்கிய சந்தோஷ், இன்று காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று பார்த்த போது அவர் படுக்கையில் சடலமாக இருந்துள்ளார்.
இதனையறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Son of popular actress Satnhi Williams dies at Virugambakkam