‘எங்க குடும்ப விழா..’ நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு பேச்சு

‘எங்க குடும்ப விழா..’ நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஇன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலின் போது இப்போது பதவியேற்றுள்ள விஷால் அணியை கடுமையாக சாடியிருந்தார் சிம்பு.

இந்நிலையில் இன்று சற்றுமுன் அவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது சிம்பு பேசும்போது…

இது எங்கள் குடும்பம். இதுவொரு குடும்பத்தின் விழா.

ஒரு நல்ல காரியம் நடைபெறுகிறது. அதில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

இதை நல்ல முறையில் செயல்பட்டு வரும் நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இனி எல்லாமே வெற்றிதான்… ரஜினி பரபரப்பு பேச்சு

இனி எல்லாமே வெற்றிதான்… ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth speech at nadigar sangam functionஇன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவ்விழாவில் புதிய கட்டிடத்திற்கு ரஜினியும் கமலும் இணைந்து, அடிக்கல் நாட்டினர்.

அதன்பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது…

இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழா நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.

இது வெற்றி விழா. இனி எல்லாமே வெற்றிகரமாக நடைபெறும் என தெரிவித்தார்.

நடிகர்களின் கோட்டையாக சங்க கட்டிடம் அமையும்.. கமல் பேச்சு

நடிகர்களின் கோட்டையாக சங்க கட்டிடம் அமையும்.. கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhaasan stillsஇன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இங்கு கமல் முன்பே வந்து கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது…

இந்த நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது கட்டிடமாக இருந்து மறுபடி கல்லாகி, பின் மறுபடியும் கட்டிடமாக உருவாகவுள்ளது.

நான் வைத்த செங்கல்லும் இந்த கட்டிடத்தில் இடம் பெறுகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி.

இது நடிகர்களின் கோட்டையாக அமையும் என்று தெரிவித்தார் கமல்.

ரசிகர்களை சந்திக்கப் போகிறேன்.. ரஜினியே சொல்லிடாரு

ரசிகர்களை சந்திக்கப் போகிறேன்.. ரஜினியே சொல்லிடாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinikanthஏப்ரல் 2ஆம் தேதி ரசிகர்களை ரஜினி சந்திக்க போகிறார் என்ற செய்தி வெளியானது.

ஆனால் இதற்கு ரஜினி தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இச்சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என நம் தளத்தில் நாங்கள் பதிவிட்ட செய்தியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில் இச்சந்திப்பை சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினியே உறுதி செய்துவிட்டார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி இதை தெரிவித்தார்.

ரசிகர்களை சந்தித்து நீண்ட நாட்களாக விட்டது. எனவே ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அவர்களை சந்தித்து போட்டோ எடுக்கவிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மலேசியா பிரதமரிடம் தூதர் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்தாரா ரஜினி..?

மலேசியா பிரதமரிடம் தூதர் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்தாரா ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth with Mayalasian PMஇந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிம் ரசாக், இங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளுநரை சந்தித்தார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கபாலி சந்திப்பின் போது ஏற்பட்ட நட்பு ரீதியான சந்திப்பு என கூறப்பட்டது.

ஆனால் இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதால் மற்ற விவரங்களும் ஆலோசிப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் மலேசியா சுற்றுலா துறை சார்பாக மலாக்க நகரின் தூதராக ரஜினியை பதவியேற்க பிரதமர் கேட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தூதர் பதவியை ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

‘எவராலும் தடுக்க முடியாது. ஏறி மிதிப்போம்..’ விஷால்

‘எவராலும் தடுக்க முடியாது. ஏறி மிதிப்போம்..’ விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.நகரில் உள்ள புதிய நடிகர் சங்க கட்டிடத்துக்கான பூமிபூஜை சற்று முன் தொடங்கியது

இந்த கட்டிடம் ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடத்தில் நடிப்புக்கான பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது

இந்த விழாவில் பங்கேற்று வரும் விஷால் கூறியதாவது…

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிற்பகலில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் வருகிறார்கள்:

இந்த புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள். இந்த கட்டிடம் அடுத்த வருடம் 2018 செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடம் கட்ட நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கு நானும் (விஷால்) கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி அளிக்கிறோம்.சிலர் பிரச்சினைகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாராலும் எங்களை தடுக்க முடியாது. அப்படி வந்தால் ஏறி மிதித்து கொண்டு போய்க்கிட்டே இருப்பேன்..’ என்றார் விஷால்.

More Articles
Follows