கடவுளே பெண் : 25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை அள்ளிய ‘சஷ்தி’

கடவுளே பெண் : 25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை அள்ளிய ‘சஷ்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது.

தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி’ குறும்படம்..

தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்..

இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு.

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

டைரக்சன் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்சன் கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூடு பீட்டர் டேமியன்.

இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

சஷ்தி

‘Shashti’ bagged 59 awards in 25 film festivals

போலீசுக்கு வக்காளத்து வாங்கிய ரஜினியே இப்போ என்ன சொல்றீங்க.? – இயக்குனர் லெனின் பாரதி கேள்வி

போலீசுக்கு வக்காளத்து வாங்கிய ரஜினியே இப்போ என்ன சொல்றீங்க.? – இயக்குனர் லெனின் பாரதி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

அப்போது அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் நடைபெற்று வந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

போராட்டங்கள் 100வது நாளை எட்டியும் மக்களின் உணர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

எனவே தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர்.

பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

(இந்த துப்பாக்கி சூட்டுக்கு அந்த தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்பட்டது)

துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். (அவர்கள் இந்நாள் வரை பாதிப்பில் உள்ளனர் என்பதை முத்துநகர் படுகொலை படம் சித்தரித்து இருந்தது.)

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை காண சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். எனவே தான் இந்த கலவரம் உருவானது எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.

எனவே விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் முக. ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

இந்த அறிக்கையில்..

“போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல்.

தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடினர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தயாரித்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விசாரணை அறிக்கையை பார்த்த பின்பு ரஜினிகாந்த் என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

“தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரம் செய்தார்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்தினார்கள், காவல்துறையை தாக்கினார்கள் என்று காவல்துறைக்கு வக்காளத்து வாங்கிய @rajinikanth அவர்கள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கைக்கு பின்பு என்ன சொல்லப்போகிறார் https://t.co/xuniruzn6T https://t.co/RenMsXia6m

Director Lenin Bharathi question to Actor Rajinikanth

JUST IN ‘திருச்சிற்றம்பலம்’ பாரதிராஜா மயங்கி விழுந்தார்.; ரசிகர்கள் அதிர்ச்சி

JUST IN ‘திருச்சிற்றம்பலம்’ பாரதிராஜா மயங்கி விழுந்தார்.; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் இனிய தமிழ் மக்களே… இந்த வார்த்தையை யார் எங்கிருந்து கேட்டாலும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் பாரதிராஜா தான் என்று சொல்லுவார்.

தன்னுடைய அழகிய இயக்கத்தால் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

தற்போது படங்களை இயக்காமல் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரது நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. இருவருமே திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டர் பெயரில் நடித்திருந்தனர்.

FIRST ON NET திருச்சிற்றம்பலம் விமர்சனம் 4/5.; திருப்தியான பழம்

இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் ஓடும் தேனி மாவட்ட தியேட்டரில் ரசிகர்களை காண சென்றுள்ளார் பாரதிராஜா.

அதன் பின்னர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்துள்ளார் பாரதிராஜா.

அப்பொழுது அங்கு இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது மதுரையில் ஓய்வெடுத்து வருகிறார் பாரதிராஜா.

Bharathiraja waited for 2 hours in airport and fainted

விஜய்யை மிரட்ட 6 வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்.; தாங்குவாரா தளபதி.?

விஜய்யை மிரட்ட 6 வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்.; தாங்குவாரா தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனராக உருவெடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அனைத்து படங்களும் தாறுமாறு ஹிட்டானது.

எனவே லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இதில் அர்ஜூன், சஞ்சய்தத், கௌதம் மேனன், பிரிதிவிராஜ் உள்ளிட்ட அரை டஜன் வில்லன்களை களமிறக்க இருக்கிறாராம் லோகேஷ்

இதையும் தன் பாணியில் வழக்கம் போல கேங்ஸ்டர் கதையாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

விவாகரத்து ஆன நடிகையை விஜய்க்கு வில்லியாக்கும் லோகேஷ்.?

மேலும் கைதி படம் போல இந்த படத்தில் பாடல்களும் & நாயகியும் கிடையாதாம்.

எனவே விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

Thalapathi 67 movie will have 6 villains

ஓ மை டார்லிங்.: ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் மகள்

ஓ மை டார்லிங்.: ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

சமீபத்தில் வெளியான ‘மாமனிதன்’ என்ற படத்திலும் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் அனிகா.

இவர்களுடன் ஸ்ரீகாந்த் முரளி, மஞ்சு, ஜானி ஆண்டனி மற்றும் விஜயராகவன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கேரளாவில் தொடங்கப்பட்டது.

அனிகாவுடன் ஆல்ஃபிரட் டி சாமுவேல் என்பவர் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

ஜினேஷ் கே ஜாய் இயக்க இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க அன்சார் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Ajith reel daughter Anikha making her debut as heroine titled Oh My Darling

‘சூர்யா 42’ படத்தில் இணையும் அனிருத் – பூஜா & மற்ற கலைஞர்கள் யார்??

‘சூர்யா 42’ படத்தில் இணையும் அனிருத் – பூஜா & மற்ற கலைஞர்கள் யார்??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சூர்யா.

இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ரெடியாகிவிட்டார்.

இது சூர்யாவின் 42 வது படமாகும்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 22 இல் தொடங்கப்படும் என்றும் அதற்கு முந்தைய நாள் படத்தின் பூஜை போடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

சூர்யா – சிவா இணையும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி

சூர்யா ஜோடியாக ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே இணைவார் என்றும் கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிவார் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் சிவா இயக்கிய வீரம் , விவேகம் , அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சூர்யா

Suriya 42 movie cast and crew updates

More Articles
Follows