Breaking: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

Breaking: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speech about Tuticorin Sterlite protestதூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினி.

அவர் பேசும்போது…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்.

உளவுத்துறை சரியான தகவலை முன்பே கொடுத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இறுதியாக சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.

ஜனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் – ரஜினி
 தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் ஆலையை திறக்க நீதி மன்றம் செல்ல நேரிடும்.

நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது

நீதிபதிகளும் மனிதர்களே. அவர்கள் அனுமதி கொடுக்கமாட்டார்கள்.” என்று பேசினார்.

Rajinikanth speech about Tuticorin Sterlite protest

Rajinikanth photos in Thoothukudi (7)

#Breaking: தமிழகம் போராட்ட பூமியாக மாறினால் ஆபத்து : ஜெ. வழியை பின்பற்ற ரஜினி வேண்டுகோள்

#Breaking: தமிழகம் போராட்ட பூமியாக மாறினால் ஆபத்து : ஜெ. வழியை பின்பற்ற ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth photos in Thoothukudi (6)தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

தற்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.

அவர் பேசியதாவது…

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.

அரசாங்கம் அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.

தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறக் கூடாது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் எந்த ஆலையும் வராது. வேலை வாய்ப்பு கிடைக்காது.

பிரச்சினைக்கு நீதி மன்றத்தை நாட வேண்டும். எல்லாவற்றிற்கும் போராட்ட என்றால் அது பிரச்சினையாகும் என்பது என் தாழ்வான கருத்து.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் சிலபோராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன.

எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

Govt should follow Jayalalitha style to control Terrorism in TN says Rajinikanth

 

Breaking: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம்; ரஜினி அறிவிப்பு

Breaking: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம்; ரஜினி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth photos in Thoothukudi (8)தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். எனவே அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 10000 அளிக்க உள்ளேன்.

அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை இங்குள்ள ஹோட்டலில் சந்திக்கிறேன். அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் வீட்டுக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழக அரசு தடை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini announce that he will give 2 lakhs compensation to people family those who lost a live in Sterlite protest
Rajinikanth photos in Thoothukudi (9)

 

#Breaking: பாதிக்கப்பட்டவர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ச்சி; என்ன சொன்னார்கள்.?

#Breaking: பாதிக்கப்பட்டவர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ச்சி; என்ன சொன்னார்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tuticorin shooting injured peoples happy with Rajini visitதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றது.

கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்படவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

அப்போது அவரை பார்த்த மக்கள் அந்த வேதனையிலும் ரஜினியை பார்த்து சந்தோஷப்பட்டனர்.

நீங்க அரசியலும் வரனும் தலைவா. எங்களை நீங்கத்தான் காப்பத்தனும் என்று கூறியுள்ளனர்.

ரஜினி இன்முகத்துடன் அவர்களை அரவணைத்து பாதிப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தற்போது தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ளார்.

அதன்பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை அவர் சந்தித்து நிதியுதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tuticorin shooting injured peoples happy with Rajini visit

Big News: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி நிதியுதவி

Big News: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini met peoples injured during anti Sterlite protests at Tuticorin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.

கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்பட, வன்முறை ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் தமிழக அரசு சார்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து வருகிறார்.

அங்கு சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் ரஜினிகாந்த்.

காயமடைந்தவர்களுக்கு நிதி மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்.

காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயை ரஜினிகாந்த் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தொடர்பில் இருங்கள்…

Rajini met peoples injured during anti Sterlite protests at Tuticorin

Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tuticorin people will be happy when they see me as Actor says Rajiniதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு புறப்படும் முன் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்.

ஒரு நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.

திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல்.

முன்னே போகும் சிங்கம் பின்னாடி அடிக்கடி பார்க்கும். ஆனால் பின்னாடியே பார்த்துக் கொண்டிருந்தால் முன்னேற முடியாது.

பழையவற்றையே விமர்ச்சித்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல.

சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

துப்பாக்கி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாதது பற்றி எனக்குத் தெரியாது. மீடியா பவர் இருக்கிறது. எனவே நீங்களே கேளுங்கள்” என்றார்.

Tuticorin people will be happy when they see me as Actor says Rajini

More Articles
Follows