விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத்.

முன்னதாக யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தில் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் ‘லியோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

‘லியோ’ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

மேலும், நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், உடற்பயிற்சி செய்து, “உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்.” என கூறினார்.

சஞ்சய் தத்

Sanjay Dutt is gearing up for Vijay’s ‘Leo’

அமெரிக்காவுக்கு பறந்த ராம் சரண்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவுக்கு பறந்த ராம் சரண்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இப்போது ஆஸ்கார் விருது இரவு நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு லைம்லைட்டில் இருக்க வேண்டும். விரைவில் நடைபெறவிருக்கும் அகாடமி விருதுகள் நிகழ்வில் ‘நாட்டு நாட்டு ‘ சிறந்த ஒரிஜினல் பாடலாக ஆஸ்கார் விருதை வெல்வதற்கான வாய்ப்பாக உள்ளது.

“கோல்டன் குளோப்ஸ் – 2023 இன் போது அவரது USA ரசிகர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பைப் பெற்ற பிறகு, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று ஆஸ்கார் விருதுக்காகப் புறப்படுவதைக் காண முடிந்தது”

Ram Charan flies to the US: Pics go viral

தோனி தயாரிப்பில் ஹரீஸ் – இவானா இணையும் பட அப்டேட்ஸ்

தோனி தயாரிப்பில் ஹரீஸ் – இவானா இணையும் பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல். ஜி. எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார்.

முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்…

“எல். ஜி. எம் திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழில் தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இது.

மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகிறோம். அனைத்து தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள இந்திய பார்வையாளர்களையும் சென்றடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

இதற்கேற்ப ‘எல் ஜி எம்’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் படைப்புத்திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில்…

” எல்.ஜி.எம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் படம் தயாராகும் பாணி ஆகிய இரண்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். சாக்ஷி தோனியின் கருத்தாக்கத்தை ரமேஷ் தமிழ்மணி நேரடியான பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைக்கதையாக மாற்றினார். இந்த திரைக்கதை கவர்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு படைப்பாக மாற்றம் பெறுவதை உடனிருந்து காண்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி.., சரியான நேரத்தில் சிறப்பாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.

Shooting of Tamil film ‘LGM’ progressing at a rapid pace, says Dhoni Entertainment

கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர்.; லட்சக்கணக்கில் அபராதம் விதித்த வனத்துறை

கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர்.; லட்சக்கணக்கில் அபராதம் விதித்த வனத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரோபோ சங்கர் தன் வீட்டில், அனுமதியின்றி 2 அரிய வகை கிளிகளை வளர்த்து வந்துள்ளார்.

அந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பதை சில தினங்களுக்கு முன் நம் FILMISTREET பார்தோம்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தன் வீட்டில் அரசு அனுமதியின்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கருக்கு வனத்துறை 2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

robo shankar Fined By The Forest Department In Parrot Breeding Case

LCUவில் மீண்டும் இணையும் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி?

LCUவில் மீண்டும் இணையும் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ LCU இன் ஒரு பகுதியாகும் என்றும், விக்ரமாக கமல்ஹாசன், ரோலக்ஸாக சூர்யா மற்றும் டில்லியாக கார்த்தி போன்ற பெரிய நட்சத்திரங்கள் தளபதி விஜய்யுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ரசிகர்களிடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையில், ‘விக்ரம்’ படத்தின் சந்தானமாக ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் தனது சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் உடைந்த கூலிங் கிளாஸில் இருந்து ஒற்றை லென்ஸைப் பிடித்துக் கொண்டு “ஒருபோதும் இறக்காதே” என்று தலைப்பிட்டுள்ளார்.

Thalapathy Vijay and Vijay Sethupathi reuniting in LCU?

தனுஷின் ‘வாத்தி’ படம் பாக்ஸ் ஆபிஸ் மூன்றாம் நாள் வசூலின் அப்டேட்

தனுஷின் ‘வாத்தி’ படம் பாக்ஸ் ஆபிஸ் மூன்றாம் நாள் வசூலின் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாளில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ்நாட்டில், மூன்றாம் நாளின் முடிவில் ரூ 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தெலுங்கில் ‘சார்’ என்ற தெலுங்குப் பதிப்பு தெலுங்கு மாநிலங்களில் இருந்து 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் படத்தின் வசூல் சுமார் 5 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

Vaathi Box Office third Day Collection Update

More Articles
Follows