சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.; மயில்சாமியின் கடைசி பட விழாவில் ஆர்வி உதயகுமார் பேச்சு

சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.; மயில்சாமியின் கடைசி பட விழாவில் ஆர்வி உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் என்பவர் இயக்கத்தில் உருவான குறும்படம் ‘விளம்பரம்’. இந்த குறும்படம் தான் நடிகர் மயில்சாமியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் இறப்பதற்கு முன் இந்த குறும்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் மயில்சாமி. மற்றொரு முக்கிய வேடத்தில் சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்வி. உதயகுமார் பேசும்போது…

“விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது வேறு விளம்பரம் என்பது வேறு.

எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் நல்ல நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அதையெல்லாம் பார்த்து மக்கள் மாறி இருந்தால் சமூகம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் படத்தை ரசிக்கும் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தபின் அந்த நல்ல கருத்துக்களை மறந்து விடுகிறார்கள்.

சினிமாவினால் ஒரு பெரிய பிரளயம் உண்டாகும் என்பார்கள். ஆனால் சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.. இதை நீங்கள் மறுத்தாலும் இதுதான் உண்மை.” என்று ஆவேசமாக பேசினால் ஆர் வி உதயகுமார்.

Rv Udayakumar speech in Vilambaram Short film Launch

கிராமத்து ‘லப்பர் பந்து’ விளையாடும் ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷ்

கிராமத்து ‘லப்பர் பந்து’ விளையாடும் ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.

தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, ரன் பேபி ரன் ஆகிய வெற்றிப் படங்களையடுத்து லப்பர் பந்து படத்தைத் தயாரிக்கிறது.

லப்பர் பந்து

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர்.

மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

லப்பர் பந்து

கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்ள, ஜி.மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

லப்பர் பந்து

Attakathi Dinesh’s lubber pandhu movie shooting chennai Guduvancheri

அடர்ந்த காட்டுப் பகுதியில் சூர்யாவின் ‘கங்குவா’

அடர்ந்த காட்டுப் பகுதியில் சூர்யாவின் ‘கங்குவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, பிஜூ தீவுகளில் நடைபெற்றது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொடைக்கானலுக்கு அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

suriya’s Kanguva movie shooting Kodaikanal

பெண்களின் வாழ்க்கை சவால்கள்.; சமூக கருத்தை சொல்ல வரும் ‘சங்கர்ஷனா’

பெண்களின் வாழ்க்கை சவால்கள்.; சமூக கருத்தை சொல்ல வரும் ‘சங்கர்ஷனா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் “சங்கர்ஷனா’.

இந்த படத்தில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா நாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – ஆதித்யா ஸ்ரீராம்

கதை, திரைக்கதை, இயக்கம் – சின்னா வெங்கடேஷ்.

தயாரிப்பு – ஸ்ரீனிவாச ராவ்

படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது…

இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நியையில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.. சமூகத்தில் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம்.

அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளோம்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

Sangarshana movie talks about Social message for Ladies

ராட்சசன் பட இயக்குனருடன் இணையும் அதிதி ஷங்கர். ஹீரோ இவரா ?

ராட்சசன் பட இயக்குனருடன் இணையும் அதிதி ஷங்கர். ஹீரோ இவரா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் மாறுபட்ட வகையைச் சேர்ந்த ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பரபரப்பான இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் அதிதி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவரது முதல் இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குனருடன் இது மூன்றாவது கூட்டணியாகும்.

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால், ராம்குமார் மூன்றாவது முறையாக இணைந்ததால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Aditi Shankar signs new movie with sensational director

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடலுக்கு குங்குமப்பூ அர்ச்சனை – ஒய்.ஜி.மகேந்திரன்

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடலுக்கு குங்குமப்பூ அர்ச்சனை – ஒய்.ஜி.மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது…

“இது புராண படம் இல்லை. சரித்திர படம். 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானை பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர். இந்த கால இளைஞர்களுக்கு இந்தப்படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக அரசும் உதவி செய்யவேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் அவர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடல் இருக்கிறது. குங்கும பூ அர்ச்சனை நடக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளர் T.கிருஷ்ணன்.

இராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்தவர் . ஆனால் மதம் என்று அவரை கட்டுப்படுத்த முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக்கொடுத்தவர். அந்த மகானை பற்றிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் சுவாமிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-

“இன்றைய தினம் நாம் எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும். நாம் இராமானுஜர் காலத்தில் இல்லையென்றாலும் இந்தப்படம் மூலம் நம்மை ராமானுஜர் காலத்துக்கு கொண்டு போயிருக்கார் தயாரிப்பாளர் கிருஷ்ணன். இராமானுஜர் 18 முறை நடந்து சென்று திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திரம் கற்றுக்கொண்டார். அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி சொல்லிக்கொடுத்தால் நீ நரகத்திற்கு போவாய் என்று நம்பி எச்சரித்தார்.

ஆனாலும் இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி அனைவரையும் அழைத்து அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படிப்பட்ட இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் தி.கிருஷ்ணன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

Even today, saffron is offered to Ramanuja’s body in Srirangam – YG Mahendran

ஸ்ரீ இராமானுஜர்

More Articles
Follows