தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ.
அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார்.
‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Red Giant movies has acquired the publishing rights of shahrukh khan’s jawan