பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி

பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakshith shetty‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் 03 ஜனவரி 2020 ல் வெளியிடப்பட இருக்கிறது.

இது குறித்து இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி பேசும் போது, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு தென்னகத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பார். அதிலும் குறிப்பாக அவருக்கு பாலச்சந்தர் மற்றும் கமல்ஹாசனின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவரோடு சேர்ந்து தமிழ் படங்களின் மீது எனக்கும் ஒரு பெரிய நன்மதிப்பும் மரியாதையும் உண்டு. மேலும் தமிழ் படங்களில் கதையும், திரைகதையும் பலமாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே என்னை ஒரு கதைக்குழு அமைத்திட தூண்டியது. இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) குழுவினர். இக்குழுவில் என்னோடு சேர்ந்து சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது. ஏழு பேரைக் கொண்ட இந்த குழு தான் எனது அனைத்து படைப்புகளுக்கும் பக்கபலமாக இருந்து, பல அருமையான கதைகளை உருவாக்கி, அவற்றை பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருமாற்றி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்தி சாதனைப் படைத்து வருகிறது.” என்றார்.

புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் மற்றும் சான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, தமிழில் வரும் ஜனவரி மாதம் 03ம் தேதி வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள்:
ரக்ஷித் ஷெட்டி
ஷான்வி ஸ்ரீவஸ்தவா
பாலாஜி மனோகர்
பிரமோத் ஷெட்டி
மதுசூதன் ராவ்
அச்யுத் குமார்
கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே
மற்றும் பலர்
தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா
கதை: தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)
ஒளிப்பதிவு: கரம் சாவ்லா
இசை: அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ்
கலை: உல்லாஸ் ஹைதூர்
நடனம்: இம்ரான் சர்தாரியா
சண்டைபயிற்சி: விக்ரம் மூர்
ஆடை வடிவமைப்பு: அருந்ததி அஞ்சனப்பா
வி எப் எக்ஸ், படத்தொகுப்பு மற்றும் இயக்கம்: சச்சின்

அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’ – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷோ

அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’ – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth in darbarலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.

வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் திரு. கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர்.
வருகின்ற ஜனவரி 08ம் தேதி பிரிமியராகவுள்ள இப்படம், சூப்பர் ஸ்டாருடன் இயக்குனர் முருகதாஸ் இணைந்துப் பணியாற்றும் முதல் படம் என்பதால் திரைப்பட ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளை ஆரம்பக் கட்டமாக கொண்டிருக்கும் இப்படக்குழு, இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.
ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு சந்தையான அமெரிக்காவில், அதுவும் வேறு எந்த கோலிவுட் நட்சத்திரங்களுடனும் ஒப்பிடமுடியாத இணையற்ற சந்தை மதிப்பைப் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் தர்பாரை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பிரைம் மீடியா தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.

ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு சிறந்த வசூலை அள்ளித்தரும் எனவும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் தளபதி (1991) திரைப்படத்தை தொடர்ந்து, அதாவது 28 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கிறார். மேலும் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசைக்கு கிடைத்திருக்கும் மதிப்பாய்வுகளும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் வருகின்ற 08 ஜனவரியில் பிரிமீயராகிறது.

‘370’ பெயரில் பாபு கணேஷின் 48 மணி நேர கின்னஸ் படம்; மோடிக்கு அர்ப்பணிப்பு

‘370’ பெயரில் பாபு கணேஷின் 48 மணி நேர கின்னஸ் படம்; மோடிக்கு அர்ப்பணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார்.

‘370’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், உலக ஆண் அழகன் போட்டியில் 6 வது இடம் பிடித்த ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பெங்காலி நடிகை மெகாலி, நிஷா, உலக அழகி பட்டம் பெற்ற திருநங்கை நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக பெசண்ட் நகர் ரவி, கராத்தே கோபால், ராஜ்கமல், வெற்றி, சிவன் ஸ்ரீனிவாசன், ரோஜா, போகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார்.

சுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாக்குவார் தங்கம், விஜய் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரமாதேவி மற்றும் அபிநயஸ்ரீ நடனம் அமைத்துள்ளனர்.

வெறும் 48 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் இப்படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் நம் இந்திய தேசத்திற்கான படமாகவும் உருவாகியிருக்கிறது.

தற்போது படத்தை முடித்துவிட்டு, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாபு கணேஷ் முதல் முறையாக நேற்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தாணு கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது… “பாபு கணேஷ் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த புதிய சாதனை ஆச்சரியமாக இருக்கிறது.

48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்திருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்திருப்பார். புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் பாபு கணேஷ் போன்றவர்களிடம் திட்டமிடுதல் குறித்து கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த ‘370’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாபு கணேஷ்…

“இப்படி ஒரு படம் நான் எடுக்கப் போகிறேன், என்ற போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது முடியுமா? என்றும் கேட்டார்கள், ஏன் படத்தில் நடித்தவர்களுக்கே அந்த சந்தேகம் இருந்தது. சரியான திட்டமிடுதல் இருந்தால் நிச்சயம் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

இந்த படத்தி ஹீரோவாக நடித்திருக்கும் ரிஷிகாந்த் (பாபு கணேஷின் மகன்), கமாண்டோ வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் காட்டிய ஈடுபாட்டை பார்த்து நானே அசந்துவிட்டேன்.

இந்த படம் ரிலீஸான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ரிஷிகாந்தை ஹீரோவாக வைத்து படம் பண்ண விரும்புவார்கள். அதேபோல் நாயகி மெகாலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ” என்றார்.

நாயகி மெகாலி பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசினார். அப்போது இந்த 370 படத்தை பாரத பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக பேசினார்.

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours

Guinness Babu Ganesh shot 370 movie within 48 hours

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fans upset with Hero movie flop result சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடீயோஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்ட அளவில் வெளியிட்டது.

ரஜினியின் பேட்ட படத்துடன் இந்த படம் மோதியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படமும் இந்த வருடத்தின் வெற்றிப் பட வரிசையில் இணைந்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இதன் நிறுவனர் ராஜேஷ் கூறும்போது..

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் எப்படி அமைந்ததோ அதுபோல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹீரோ படம் அமையும் என கூறியிருந்தார்.

ஆனால் படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வெறும் அறிவுரையாக மட்டுமே உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sivakarthikeyan fans upset with Hero movie flop result

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie lossகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.

உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் தரப்பில், ‘சம்பளம் பெற்று நடிப்பவர்களிடம், இழப்பீடு கேட்பது சரியல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது.. ”மாவட்ட ஆட்சியருக்கே, 1 லட்சம் தான் சம்பளம். நடிகர்களோ, கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எங்கள் தீர்மானத்தை மதிக்காத நடிகர்கள் படங்களை திரையிட மாட்டோம்,” என கூறியுள்ளார்.

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie loss

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaஇந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள் இல்லாமல் தமிழர்கள் ஒரு நாளையும் கடந்திருக்க முடியாது.

அன்னக்கிளியில் தொடங்கி இதுவரை 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

தற்போதும் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows