ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகனுடன் இணையும் ஜீவா

ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகனுடன் இணையும் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva teams up with Joker fame director Raju Muruganஒரு சில படங்களை மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படி உருவாகி அனைவராலும் பாராட்டுப் பெற்று தேசிய விருதை பெற்ற படம் ஜோக்கர்.

இப்படத்தை இயக்கிவர் ராஜுமுருகன்.

இதனையடுத்து அவர் இயக்கவுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில், நடிகர் ஜீவாவை அவர் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று நள்ளிரவு (பிப்ரவரி 6) வெளியிடப்படும்.

மேலும் இந்த இன்றைய நாட்பு நடப்புக்கு ஏற்ற, தலைப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Jiiva teams up with Joker fame director Raju Murugan

jiiva rajmurugan

நண்பர்களுடன் இணைந்து புது பிஸினஸ் தொடங்கிய அனிருத்

நண்பர்களுடன் இணைந்து புது பிஸினஸ் தொடங்கிய அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஇளமை பருவத்திலேயே உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்களின் கவனம் ஈர்த்தவர் அனிருத்.

இவர் இசையமைத்த கொலவெறி பாடலை கேட்காதவர்களே இல்லை எனலாம்.

இந்நிலையில் இவர் இசைப்பயணத்தை தொடர்ந்து புதிய தொழில் ஒன்றிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

தன் நண்பர்களுடன் இணைந்து சென்னை, தேனாம்பேட்டையில் ஒரு ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த ஹோட்டலுக்கு The Summer House Eatery என பெயரிட்டுள்ளனர்.

இந்த தகவலை புகைப்படங்களுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.

Anirudh Ravichander‏Verified account @anirudhofficial

A lil eatery which I have ventured into with friends.. The #SummerHouseEatery..Opens at 12 everyday.. Check it out

மீண்டும் விஜய்-அஜித்தை இணைக்க முயற்சி; இயக்குனரின் கனவு பலிக்குமா..?

மீண்டும் விஜய்-அஜித்தை இணைக்க முயற்சி; இயக்குனரின் கனவு பலிக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mohan rajaரஜினி-கமலுக்கு அடுத்த லெவலில் அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக திகழ்கின்றனர்.

இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் அஜித் சில காட்சிகளிலே மட்டுமே வருவார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் இணைக்க ஒரு இயக்குனர் முயற்சித்து வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனி ஒருவன் பட இயக்குனர் மோகன்ராஜா தான்.

இவர்களுக்கான கதையை தேர்வு செய்துவிட்டதாகவும் விரைவில் அவர்களை சந்தித்து அந்த கதை குறித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அது நிச்சயம் ரசிகர்களுக்கு செம மாஸ் விருந்தாக அமையும் என நம்பலாம்.

சிம்பு-விஜய்சேதுபதி கூட்டணியிலிருந்து நடிகர் விலகல்; நடிகை இணைந்தார்

சிம்பு-விஜய்சேதுபதி கூட்டணியிலிருந்து நடிகர் விலகல்; நடிகை இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aditi Rao collaborate with Mani Ratnam againகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, பகத்பாசில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கால்ஷீட்க்கு தேதிகள் ஒத்துவராததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது மற்றொரு நாயகியாக காற்று வெளியிடை பட நாயகி அதிதிராவ் இப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Rao collaborate with Mani Ratnam again

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Goli Soda trailer will be released on 14th Feb Valentines Dayபிரபலமான ஒளிப்பதிவாளர்கள் தற்போது இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.

அதில் ஒருசிலரே வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர் எஸ்.டி.விஜய் மில்டன்.

‘கோலிசோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர்.

தற்போது ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் சமுத்திரக்கனி முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடன் கௌதம் வாசுதேவ் மேனனையும் நடிகராக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

சுபிக்ஷா இதில் நாயகியாக நடிக்க, விஜய்மில்டனின் சொந்த நிறுவனமான ‘ரஃப் நோட்’ தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இதன் டிரைலரை பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

அன்றைக்கு என்ன ஸ்பெஷல் தெரியும்தானே.? காதலர் தினம் என்பதையும் நாங்கள்தான் சொல்ல வேண்டுமா?

Goli Soda 2 trailer will be released on 14th Feb Valentines Day

ரசிகர்களின் இடத்திற்கே சென்று போட்டோ எடுக்கும் லாரன்ஸ்; ஏன்.?

ரசிகர்களின் இடத்திற்கே சென்று போட்டோ எடுக்கும் லாரன்ஸ்; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence going to meet his fans to take photosநடிகர், நடிகைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வழக்கம் ரசிகர்களுக்கு எப்போதும் இருந்து வருகிறது.

இதனால் பல ரசிகர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, நடிகர்கள் வசிக்கும் பகுதிகளில் பல மணி நேரங்கள் காத்திருப்பார்கள்.

ஒரு சில நடிகர்கள் முன்வந்து படம் எடுப்பார்கள். சிலர் தவிர்த்து விடுவார்கள்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இனி ரசிகர்கள் என்னை காண நேரில் வர வேண்டாம்.

நானே உங்கள் இடத்திற்கு வருகிறேன். அப்போது போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தையும் அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஒரு ரசிகர் ஊரில் இருந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

எனவேதான் இவர் நேரில் வருகிறேன் என அறிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி சேலம் செல்கிறார்.

இனி அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லவிருக்கிறாராம்.

Raghava Lawrence‏ @offl_Lawrence 1h1 hour ago
Hi dear Friends and Fans..! I’m coming for you to Salem on 7th

Raghava Lawrence going to meet his fans to take photos

More Articles
Follows