தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற ஹூக்கும் டைகர் கா ஹூக்கும் என்ற பாடல் இன்று ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியானது.
நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் பாடலை சூப்பர் சுபு என்பவர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களுக்கும் ரஜினிக்கு எண்டு கார்டு என சொன்ன ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க விதமாக அமைந்துள்ளது.

இதோ இந்த பாடல் வரிகள்..
அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..
வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்,
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..
நடக்குற நடை புயலா..!
முடி ஒத்துகுற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!
பளபள பளக்குற வெயிலா!
அடி 100க்கு டயலா..!
செத்து திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..

டைகர்கா ஹுக்கும்…
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்…
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்…
நரையிருச்சுன்னு முறைச்சா, துரைகிட்ட வந்து கொலைச்சா, சிறையில் சிக்கி தொலையாதே.. ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில..
தொட நெருங்கிட முடியாதே, எது இழுக்கிது தெரியாதே, குள்ள நரிக்குது புரியாதே..
விதிகளை திருப்புற.. தலைவரு அலைப்பற..
உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…!
JAILER – Hukum Lyric Video
Thalivar Rajinikanth #filmistreet

Rajini’s ‘Jailer’ second single hukum is released










