தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் சந்தானம், சாமிநாதன், மனோகர் உள்ளிட்டவர்கள் சினிமாவுக்கு வந்துவிட்டனர்.
இதில் புகழ்பெற்ற ரஜினி ஜீவாவும் தற்போது நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு ‘ஆரம்பமே அட்டகாசம்’ என பெயரிட்டுள்ளனர்.
ஆரம்பம் மற்றும் அட்டகாசம் என்ற பெயர்களில் அஜித் நடித்த படங்கள் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இதன் டீசரை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவிருக்கிறார் விஜய்சேதுபதி.
இப்படத்தை ரங்கா என்பவர் இயக்க, ஜெயா கே.தாஸ் இசையமைக்கிறார்,
‘ஸ்வாதி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் சார்பில் மாலதி வேலு, பத்தூள் சுக்குருல்லா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.