எம்பிரான் படத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ராதிகா ப்ரீத்தி அறிமுகம்

எம்பிரான் படத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ராதிகா ப்ரீத்தி அறிமுகம்

radhika preetiகர்நாடகா கோலாரை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி.

சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் .

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் .

நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்குகிறார்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி.

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர்.

நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படதினை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்

அஜித்-விஜய்-சூர்யா மோதல்; யாரை நீக்குவார் சங்கத் தலைவர் விஷால்.?

அஜித்-விஜய்-சூர்யா மோதல்; யாரை நீக்குவார் சங்கத் தலைவர் விஷால்.?

What will be Vishals decision on Vijay Ajith Suriya Clash on 2018 Diwaliகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் (2018) ஆகிய இரண்டு மாதங்களில் தமிழகத்தில் எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

விஷால் தலைமையிலான இந்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்து இருந்தது.

அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வாரத்திற்கு அதிகபட்சமாக 4 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் 1 அல்லது 2 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டது.

மேலும் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்து கடிதம் கொடுக்கும். அதன்பின்னரே தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

காரணம் தமிழகத்தில் 1100 தியேட்டர்களே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடித்து வரும் விஸ்வாசம், விஜய் நடித்துவரும் தளபதி 62, சூர்யா நடித்து வரும் என்ஜிகே ஆகியோரின் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இத்துடன் விஷால் நடித்துவரும் சண்டக்கோழி 2 படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.

நிச்சயம் இத்தனை படங்கள் வெளியானால், குறைந்தபட்ச தியேட்டரே கிடைக்கும்.

இதனால் எந்த பட தயாரிப்பாளருக்கு தீபாவளி ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு விஷால் கடிதம் கொடுப்பார்? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

நிச்சயம் ஒரு ஹீரோவின் படத்தை நீக்கினால் மட்டுமே அடுத்த ஹீரோவுக்கு அதிகபட்ச தியேட்டர் கிடைக்கும். எனவே விஷால் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What will be Vishals decision on Vijay Ajith Suriya Clash on 2018 Diwali

ajith vijay suriya

அருள்நிதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் எஸ்பி சினிமாஸ் சங்கர்

அருள்நிதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் எஸ்பி சினிமாஸ் சங்கர்

Arulnithis next movie produced by SP Cinemasஒரு நடிகரின் மிகப்பெரிய சாதனை என்பது தனக்கென ஒரு தனி எல்லையை வகுப்பது தான்.

ஒரு சிலர் மாஸ் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள், வெகு சிலரே வழக்கத்துக்கு மாறான சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அருள்நிதி இந்த இரண்டையும் மிகச்சரியாக தழுவி, பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவரது படங்கள் மாஸாக அதே நேரத்தில் யதார்த்தமானவையாகவும் உள்ளன. அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்படக் கூடிய, பாராட்டப்படக் கூடியவையாக உள்ளன.

அது முதுகு தண்டு சில்லிட வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, அல்லது மிகவும் புத்திக்கூர்மையான இளைஞனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மௌனகுருவாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார்.

இதுவே அவரை இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடிக்க வைக்க முக்கியமான காரணம் ஆகும். அருள்நிதி அடுத்து பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரது புதுமையான கதை தேர்வில் இந்த படமும் ரசிகரகளுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், வரும் நாட்களில் அவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

“அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும் போது அவர் காட்டிய பேரார்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது.

நல்ல தரமான கமெர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார் எஸ்பி சினிமாஸ் சங்கர்.

Arulnithis next movie produced by SP Cinemas

இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதை நினைத்தால் பயமாக உள்ளது..: சூர்யா

இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதை நினைத்தால் பயமாக உள்ளது..: சூர்யா

Never miss the Opportunity in your life says Actor Suriyaநடிகரும் ஓவியருமான சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

இந்த சேவையை இவர் 40 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

சமீப ஆண்டுகளாக சூர்யாவின் அகரம் பவுண்டேஷனும் இதில் இணைந்துள்ளது.

40வது ஆண்டாக கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது:

கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம்.

50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன்.

சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்கிறது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.

கல்வியில் எங்கோ பின் தங்கிவிட்டோமோ, கல்வித்தரம் சரியாக இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன்.

எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது.

பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது.

அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன்.

அது தான் பெரிய நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா – அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை.

அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம்.

கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.” என்று பேசினார் சூர்யா

Never miss the Opportunity in your life says Actor Suriya

sivakumar educational trust

தனுஷ் பாணியில் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்யும் சத்யா

தனுஷ் பாணியில் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்யும் சத்யா

arya brother sathyaசெல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அண்ணன் தம்பி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இதில் தனுஷ் கடந்த 2004ல் ரஜினியின் முமூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். அதன் பின்னரே 2006ல் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இந்த வரிசையில் ஆர்யாவின் தம்பியும் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு….

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார் ஆர்யா. இவரை பல பெண்களுடன் இணைத்து கிசுகிசு வந்தாலும் இதுவரை இவருக்கு திருமணம் ஆகவில்லை.

ஆனால் இவருடைய தம்பியும் நடிகருமான சத்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

ஷாகிர் என்ற தன் இயற்பெயரை ‘சத்யா’ என மாற்றம் செய்து அவர் படங்களில் நடித்து வருகிறார்.

‘புத்தகம்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான இவர், ‘அமரகாவியம்’ படத்தில் நடித்தார்.

தற்போது ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில், நடித்து வருகிறார்.

இந்நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலரவே இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற ஜீன் 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாம்.

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன்; ஹீரோ இவர் இல்லையாம்!

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன்; ஹீரோ இவர் இல்லையாம்!

nayanthara and vignesh shivanதென்னிந்திய சினிமாவில் நெ. 1 நடிகையாக திகழ்கிறார் நயன்தாரா.

இவர் நடித்த ’அறம்’ படத்தை இவரது மேனேஜர் தயாரித்திருந்தார்.

தற்போது நயன்தாராவே தயாரிப்பாளராக மாறுகிறார்.

அதர்வாவை நாயகனாக வைத்து இதயம் முரளி என்ற படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இப்படத்தை நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக விக்னேஷ் சிவன் நடிப்பார் என கூறப்பட்டது. அது வேறு ஒரு படமாக உருவாகலாம் எனத் தெரிகிறது.

More Articles
Follows