‘ரஜினி-அஜித்துக்கு பிறகு ராம்கிதான்…’ ராதாரவி பேச்சு

‘ரஜினி-அஜித்துக்கு பிறகு ராம்கிதான்…’ ராதாரவி பேச்சு

actor radha raviவாசுகி தயாரிப்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இங்கிலீஷ் படம்.

இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை ஆங்கிலப்படம் என மாற்றியுள்ளனர்.

ரிக்கோ இசையமைத்துள்ள இப்படத்தில் ராம்கி முக்கிய வேடம் ஏற்று நடிக்க, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ராதாரவி, ஆர்.வி. உதயகுமார், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ், இயக்குனர் பேரரசு, சிங்கமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ராதாரவி பேசும்போது….

“நான் ராம்கியுடன் சில படங்களில் நடித்துள்ளேன். மிகச் சிறந்த நடிகர். அன்று பார்த்த போலவே இப்போதும் இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ரஜினியை பார்த்து வியப்படைவேன். அவர் ஒருவர்தான் முடி நரைத்தாலும் இளமையாக இருப்பார்.

நாம் எல்லாம் அப்படி வெளியில் போனால், என்ன வயசாயிடுச்சா? என்றுதான் கேட்பார்கள்.

ரஜினிக்கு பிறகு அஜித், அதே இளமையோடு காட்சியளிக்கிறார். இப்போது ராம்கியும் அப்படிதான் இருக்கிறார்.

இனிமேல்தான் நிரோஷா உஷாராக இருக்க வேண்டும்” என்று கலகலப்பாக பேசினார் ராதாரவி.

விஷால்-பிரசன்னா இணையும் ‘துப்பறிவாளன்’ தொடங்கியது

விஷால்-பிரசன்னா இணையும் ‘துப்பறிவாளன்’ தொடங்கியது

thupparaivalan movie pooja stillsசுராஜ் இயக்கிய ‘கத்தி சண்டை’ படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில் விஷாலுடன் வினய், பிரசன்னா, ராகுல் ப்ரித்திசிங், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அரோல் கரோலி இசையமைக்க, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக விஷாலே தயாரிக்கிறார்.

தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி; நீங்களும் நடிக்கனுமா?

தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி; நீங்களும் நடிக்கனுமா?

kalaipuli thanu and soundarya rajiniகபாலி, தெறி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு.

இப்படங்களை தொடர்ந்து இவர் தயாரிக்க உள்ள புதிய படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.

இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? எனப் பெயரிடப்படலாம் என தெரியவந்துள்ளது.

எனவேதான் #NEEK என்ற வார்த்தையை உபயோகித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் தனுஷ் எழுதுகிறார்.

இப்படத்தை முதலில் தனுஷ் தயாரிக்கக்கூடும் என செய்திகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க திறமையானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே உங்களது படம் மற்றும் தகவல்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தொடர்புக்கு உதவி இயக்குனர் சீரஞ்சிவி (9629 33 7116)

 

soundarya thanu

ரஜினிகாந்த்-விஜய் இடத்திற்கு வந்த சூர்யா

ரஜினிகாந்த்-விஜய் இடத்திற்கு வந்த சூர்யா

suriyaஹரி இயக்கும் சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

வருகிற டிசம்பர் 16ஆம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டர்.

எனவே இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் உள்ள தலகோன் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

இது அடர்ந்த காட்டு பகுதியாகும். தற்போது இங்கு இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம்.

இங்குதான் விஜய்யின் புலி படத்தின் காட்சிகளை எடுத்துள்ளனர்.

மேலும் ரஜினியின் 2.0 படத்தின் சில காட்சிகளை இங்கு எடுத்தார்களாம்.

‘ஜெயலலிதா உடல்நிலை; அரசியலில் ரஜினி..’ – சத்யநாராயணா பேட்டி

‘ஜெயலலிதா உடல்நிலை; அரசியலில் ரஜினி..’ – சத்யநாராயணா பேட்டி

Rajini and his brother Sathyanarayana raoரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று வருகை தந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ரூ.25 ஆயிரம் செலுத்தி, காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார்.

தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறியதாவது…

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டியும், காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டு, தமிழக-கர்நாடக மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

அதன்பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு…

அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார்.

‘கார்மேக குழலி’ ரித்திகா சிங்கின் டார்லிங் யார் தெரியுமா?

‘கார்மேக குழலி’ ரித்திகா சிங்கின் டார்லிங் யார் தெரியுமா?

ritika singhஇறுதிச்சுற்று என்ற தன் முதல் படத்தின் மூலம் தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ரித்திகா சிங்.

இதனையடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.

இதில் இவர் ஏற்ற கார்மேக்குழலி என்ற கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில், விஜய்சேதுபதி என் டார்லிங். சூட்டிங் ஸ்பார்ட்டில் அவருடைய சர்ப்போர்ட் மறக்க முடியாது என்றார்.

தற்போது லாரன்ஸ் உடன் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இந்த கார்மேக அழகி ரித்திகா.

More Articles
Follows