மீண்டும் ‘டிக் டாக்’..; சூர்யா – சிவகார்த்திகேயன் பட நாயகியின் அதிரடி அறிமுகம்.!

Tik Tok movieநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான ‘டான்’ படத்திலும் பிரியங்கா அருள் மோகனே நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாண்டிராஜ் & சூர்யா இணையும் படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 படங்களும் இன்னும் ரிலீசாகவில்ரை.

அதற்குள் பிரியங்கா அருள் மோகனின் முதல் படம் தமிழில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்திற்கு ‘டிக் டாக்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

மதன் & டீம் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளனர்.

இந்தியாவில் ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெயரில் படம் வருவது குறிப்பிடத்தக்கது.

Priyanka Mohan’s next film is titled Tik Tok

Overall Rating : Not available

Related News

Latest Post