2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

prithvi rajதமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

இவர் அண்மையில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருந்தார்.

அதன்பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்தது.

இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை.

ஜோர்டான் நாட்டில் ஒரு தீவில் சிக்கினாலும் அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

சூட்டிங் முடிந்தவுடன் எங்கும் செல்லமுடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி பிருத்விராஜ் படக்குழுவினர் உள்ளிட்ட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சியை அவர்கள் வந்தடைந்தனர்.

Overall Rating : Not available

Latest Post