தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேமுதல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
இதனிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
அதிமுக.,வை கடுமையாக விமர்சனம் செய்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இவரை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் வெளியேறியது.
கருணாஸ் கூறியதாவது:-
“முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.
இந்த நிலையில், “சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைகட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.
இந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார்.
மேலும் திமுக., கூட்டணியில் தொகுதியை பெறுவதற்கும் முயற்சி செய்தனர்.
ஆனால், மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியதால் கருணாசை திமுக. கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று திமுக.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்தார்.
ஆனால் தமிமுன் அன்சாரி கூறுகையில்…
“தங்களுக்கு திமுக சீட் ஒதுக்காதது வருத்தம். கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.
Politician Karunaas withdraws DMk support






