தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி படங்கள் ரிலீஸாகும் போது தங்கள் படங்களை மற்ற நடிகர்கள் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் சந்திரமுகி ரிலீஸ் சமயத்தில் சச்சின் படத்தை வேண்டுமென்றே ரிலீஸ் செய்தார் விஜய்.
ஆனால் சச்சின் படம் படுதோல்வி அடைய அதன்பின் மற்ற ஹீரோக்கள் எந்த படங்களையும் ரிலீஸ் செய்யவில்லை. அதன்பின்னர் இந்தாண்டு 2019 ரஜினியுடன் பேட்ட படத்துடன் மோதினார் அஜித். தன் விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்தார்.
பொங்கல் தினம் என்பதால் நிறைய விடுமுறை நாட்கள் வரவே இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டையாடியது.
இதனையடுத்து தற்போது மற்ற ஹீரோக்களும் இதே பார்முலாவில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
அதாவது வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் விடுமுறை தினங்கள் வருவதால் அந்த சமயத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவுள்ளனர்.
தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வருகிறது. அத்துடன் கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Petta and Viswasam clash formula continuing to Bigil clash